இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights

Updated: 26 June 2019 10:18 IST

முன்னதாக இலங்கையிடம் தோற்றிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி கண்டுள்ளது.

Australia Reach World Cup 2019 Semis With 64-Run Win Against England
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் மட்டும், தனியாக போராடிக் கொண்டிருந்தார். அவர் 115 பந்துகளுக்கு 89 ரன்கள் அடித்தார்.  © AFP

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெகரன்டார்ஃப், 5/44 என்ற பவுலிங் மூலம் கெத்து காட்டினார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஸ்டார்க், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

முன்னதாக இலங்கையிடம் தோற்றிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி கண்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் இங்கிலாந்து, அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது. 

அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து களம் காண உள்ளது இங்கிலாந்து. அதில் ஒரு போட்டியிலாவது அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி, கடைசியாக இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய 11 போட்டிகளில் 10-ல் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்றைய போட்டியில் அந்த அணிதான், சார்ஜில் இருந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு ஈடு கொடுக்க முடியாத இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களுக்குப் பெவிலியன் திரும்பினார்கள். 

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் மட்டும், தனியாக போராடிக் கொண்டிருந்தார். அவர் 115 பந்துகளுக்கு 89 ரன்கள் அடித்தார். 

போட்டியின் ஆட்ட நாயகன் விருது, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்சிற்குத் தரப்பட்டது. “சில அணிகளுக்கு எதிராக நாம் விளையாடும் போது மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குவோம். ஆனால் இங்கிலாந்திற்கு எதிராக நான் விளையாடிய பல போட்டிகளில் குறைந்த ஸ்கோர்களில் அவுட்டாகி உள்ளேன். அதனால், முதலில் நான் கவனமாக விளையாடினேன். அதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்திற்கு இறங்கினேன்” என்ற விருது வாங்கிய போது பேசினார் பின்ச்.
 

Comments
ஹைலைட்ஸ்
  • பின்ச், நேற்றைய போட்டியில் சதம் அடித்தார்
  • ஆஸியின் பெகரன்டார்ப், நேற்று 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி ஆஸ்திரேலியாதான்
தொடர்புடைய கட்டுரைகள்
தொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..?
தொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..?
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
‘பந்துனா இப்படி போடணும்!’- ஸ்டார்க்கின் ‘ஸ்டன்னிங் யார்க்கர்’; வாவ் சொல்லும் ட்விட்டர் #Video
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
இங்கிலாந்தை தவிடுபொடியாக்கி அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா! #Highlights
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதல்!! #ScoreCard
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதல்!! #ScoreCard
Advertisement