காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியிலிருந்து ரிச்சர்ட்ஸன் விலகல்!

Updated: 09 May 2019 10:27 IST

கேன் ரிச்சர்ட்ஸனை இவருக்கு மாற்றாக அறிவித்துள்ளது. ஹேசல்வுட் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Australia Paceman Jhye Richardson Out Of World Cup
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்ஸன் உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். © AFP

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்ஸன் உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது கேன் ரிச்சர்ட்ஸனை மாற்றியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயமடைந்துள்ளார். அதன்பின் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சமீபத்திய பரிசோதனைக்கு பின் அவர் முழுமையாக குணமடையவில்லை என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய உடற்பயிற்சி நிபுணர் டேவிட் இவரை அதிகம் மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்திய சோதனையில் வலைபயிற்சியில் பந்துவீசும்போது, சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் தவித்தார்.

தேர்வுக்குழுவுடன் கலந்து ஆலோசித்து அணியை விட்டு விலக்கும் முடிவெடுத்ததாக கூறினார்.

கேன் ரிச்சர்ட்ஸனை இவருக்கு மாற்றாக அறிவித்துள்ளது. ஹேசல்வுட் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு ஹேசல்வுட் தேவை அதிகமிருப்பதால் அவரை அணியில் சேர்க்க முடியாமல் போனதாக கடந்த மாதம் தேர்வுக்குழு அறிவித்திருந்தது.

அணி விவரம்:

பின்ச், கவாஜா, வார்னர், ஸ்மித், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டோனின்ஸ், அலெக்ஸ் கேரே, பாட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், கோல்டர்நைல், பெகன்ட்ராஃப், நாதன் லையன், ஆடம் சம்பா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியிலிருந்து ரிச்சர்ட்ஸன் விலகல்!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை அணியிலிருந்து ரிச்சர்ட்ஸன் விலகல்!
ஆஸ்திரேலியா பந்துவீச்சாளரின்
ஆஸ்திரேலியா பந்துவீச்சாளரின் 'அடடே' திட்டம்
Advertisement