டேவிட் வார்னருக்கு புதியதாக சூட்டப்பட்டுள்ள ‘பட்டப் பெயர்’ இதுதான்!

Updated: 21 June 2019 12:59 IST

வார்னருக்கு முதலில் ‘Bull’ (காளை) என்ற பட்டப் பெயர் இருந்தது. அதில் இருந்துதான் தற்போதைய பட்டப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

David Warner Reveals New Nickname Given By Teammates
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டுக் காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது © AFP

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக் கோப்பைத் தொடரில் ‘மரண மாஸ்' ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், 89.40 சராசரியில் 447 ரன்கள் ஸ்கோர் செய்துள்ளார். நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியில் 166 ரன்கள் குவித்தார் வார்னர். 2019 உலகக் கோப்பையில் இதுவே அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும். இப்படி அட்டகாச ஃபார்மில் இருக்கும் வார்னருக்கு, அவரது அணியின் சகாக்கள் புதிய ‘பட்டப் பெயரை' சூட்டியுள்ளனர். இது குறிதுத வார்னரே சொல்லி இருக்கிறார். 

cricket.com.au - க்கு வார்னர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எனது அணியினர் என்னை இப்போதெல்லாம் ‘Hum-Bull' (Humble- அமைதி) என்று அழைக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நான் நல்ல முறையில் நடந்து கொள்வதால் அவர்கள் அப்படிப்பட்ட பட்டப் பெயரை வைத்துள்ளனர். நான் ஆக்ரோஷமாக இருக்க முடியாத சூழலில் இருக்கின்றேன். வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி” என்று பேசியுள்ளார். 

வார்னருக்கு முதலில் ‘Bull' (காளை) என்ற பட்டப் பெயர் இருந்தது. அதில் இருந்துதான் தற்போதைய பட்டப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஓராண்டுக் காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. தடைக் காலம் முடிவடைந்து அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பினார். அவர் கம்-பேக் கொடுத்ததில் இருந்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். 

உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகள் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா, 10 புள்ளிகள் எடுத்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, அடுத்ததாக வரம் ஜூன் 25 ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. 


 

Comments
ஹைலைட்ஸ்
  • அடுத்ததாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது
  • 25 ஆம் தேதி அந்தப் போட்டி லார்ட்ஸில் நடக்கிறது
  • வார்னர், இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
"735 நாட் அவுட்" - 3 சதங்களுக்கு பிறகு டேவிட் வார்னரை சந்தித்த பிரைன் லாரா!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்: ஐஸ்லாந்து கிரிக்கெட்டால் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்ட இமாம்-உல்-ஹக்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
Brian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்!
போட்டிக்கு முன் சிறு வயது விளையாட்டில் ஈடுபட்ட டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ்
போட்டிக்கு முன் சிறு வயது விளையாட்டில் ஈடுபட்ட டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
Advertisement