"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்

Updated: 11 July 2019 16:55 IST

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆபத்தான வீரர் ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார் போல்ட்.

India vs New Zealand: Anything Can Happen With MS Dhoni, Ravindra Jadeja At Crease, Says Trent Boult
வரும் ஞாயிறன்று நியூசிலாந்து அணி இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அணியை லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்ளும். © AFP

உலகக் கோப்பை அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 2015 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று ரன்னர்-அப் ஆனது நியூசிலாந்து அணி. ஆரம்பத்தில் இந்திய அணி இலக்கை நோக்கி ஆடும் போது தடுமாறியது நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்ததாகவும், தோனி மற்றும் ஜடேஜாவின் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணிக்கு பயத்தை ஏற்படுத்தியதாகவும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறினார்.

"அணியில் இருக்கும் சிரமத்தை அவர்கள் இருவரும் சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டனர். தோனி மற்றும் ஜடேஜா க்ரீஸில் இருந்தார் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றார் போல்ட்.

240 இலக்கை எட்ட ஆடத்தொடங்கிய இந்தியா முதல் 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டரை ஹென்றி மற்றும் போல்ட் வெளியேற்றினர்.

ஜடேஜா (77) மற்றும் தோனி (50), 7வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் ஆடினர். இவரகள் இருவரும் சிறப்பாக ஆடி வந்த நிலையில், ஹென்றி மற்றும் போல்ட் புது பந்து ஆற்றலால் விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆபத்தான வீரர் ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார் போல்ட். இந்த போட்டியில் பங்கேற்றது தனக்கு மகிழ்ச்சியளித்ததாக கூறினார்.

" யாராக இருந்தாலும் எங்களின் சிறந்த பந்துகள் மட்டுமே போதுமானது, சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தோம்" என்றார் போல்ட்.

வரும் ஞாயிறன்று நியூசிலாந்து அணி இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா அணியை லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்ளும்.

"உலகக் கோப்பை இறுதியில் பங்கேற்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். யாரோடு விளையாட நேர்ந்தாலும், எங்களின் வெற்றியை தடுக்க முடியாது"

"இப்போது நாங்கள் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் நிலையில் உள்ளோம். எல்லா பக்கமும் சிறந்த வீரர்கள் தான் உள்ளனர். இவர்கள் எல்லாரையும் ஒரு பக்கம் அழைத்து செல்லும் தருணம் இது" என்றார் போல்ட்.

Comments
ஹைலைட்ஸ்
  • மான்செஸ்டரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து
  • ஆரம்பத்தில் இந்தியா தடுமாறியது நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தது
  • ஜடேஜா, தோனி பார்ட்னர்ஷிப் அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது: போல்ட்
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
Advertisement