உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!

Updated: 24 June 2019 22:01 IST

முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ரஸல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Andre Russell Ruled Out Of World Cup 2019
ரஸலுக்கு பதிராக அம்ரிஸ் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. © AFP

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயது வீரர் அம்ரிஸ் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 5 விக்கெட்டுகளை ரஸல் எடுத்துள்ளார். பாயின்ட்ஸ் டேபிளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த மேட்சில் வரும் வியாழன் அன்று வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை எதிர்கொள்கிறது. 
 
8-வது இடத்தில் உள்ளதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அந்த அணிக்கு மிக குறைவாகவே காணப்படுகிறது. இந்த சூழலில் ரஸலின் விலகல் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

ரஸலுக்கு பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள சுனில் அம்ரீஸ் 6 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 316 ரன்களை குவித்திருக்கிறார். அவரது சராசரி 105.33 ரன் ஆக உள்ளது. மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அரையிறுதிக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து நடைபெறவிருக்கும் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதனை தவிர்த்து மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக அமைய வேண்டும். 
 
(With AFP inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • வெஸ்ட் இண்டீசுக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதம் உள்ளன
  • அடுத்தடுத்த மேட்சில் இந்தியா, இலங்கை, ஆப்கனை எதிர்கொள்கிறது வெ.இ.
  • வியாழன் அன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் நடைபெறுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
முதல் குழந்தையை எதிர்பார்க்கும் ஆன்ரே ரஸல் தம்பதியினர்!
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
‘யுவராஜ் ரிட்டர்ன்ஸ்!’- ஓய்வுக்குப் பின்னர் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கிறார்
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் விலகல்!!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
கொல்கத்தாவை வென்று ப்ளே ஆஃபை உறுதி செய்யுமா மும்பை!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
2019 உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!
Advertisement