ஐசிசி பவுண்டரி விதியை கலாய்த்த அமிதாப் பச்சன்!

Updated: 16 July 2019 17:42 IST

50 ஓவர் போட்டி முடிவில் போட்டி டையானது. பின்னர், சூப்பர் ஓவர் போட்டியும் டையானதால், அதிக ரன்கள் எடுத்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றது.

World Cup Final: Amitabh Bachchan Trolls ICC
ஐசிசியின் இந்த விதி இப்போது கிரிக்கெட் உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுப்பொருளாகியுள்ளது. © AFP

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இருந்த இங்கிலாந்து அணி வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த விதி இப்போது கிரிக்கெட் உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பேசுப்பொருளாகியுள்ளது. 50 ஓவர் போட்டி முடிவில் போட்டி டையானது. பின்னர், சூப்பர் ஓவர் போட்டியும் டையானதால், அதிக ரன்கள் எடுத்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதிக பவுண்டரி விதியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் "கேலிக்குரியது" மற்றும் "தவறானது" என்று விமர்சித்தனர். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், இந்த விதி குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

76 வயதான இவர், இந்த விதிகளுக்கு நகைச்சுவையான ஒப்பீடுகளை கொண்டு ட்விட்டரில் பதிவு செய்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் போட்டி சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்டது.  

நியூசிலாந்து அணி கேப்டன், தன்னுடைய அணியினர் களத்தில் தோல்வியடைவில்லை, இந்த விதிகளால் மட்டுமே தோல்வியை சந்தித்தது என்றார்.

"இது ஒரு அவமானம். ஆனால், நியூசிலாந்து நிர்வாகம் போட்டிக்கும் முன்பே விதிகளை ஏற்று கையெழுத்திட்டது" என்றார்.

"கடைசியில் எதுவும் எங்களை பிரிக்கவில்லை, யாரும் தோற்கவுமில்லை. ஆனால், வெற்றி பெற்றவர்கள் என்று இங்கிலாந்து அறிவிக்கப்பட்டனர். அவ்வளவுதான்" என்றார் வில்லையம்சன்.

நியூசிலாந்து கேப்டன் மற்றும் அவரின் அணியினர் எல்லோராலும் பாராட்டப்பட்டனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
புக்கியுடனான ஷாகிப் அல் ஹசனின் வாட்ஸ்-அப் உரையாடலை வெளியிட்ட ஐசிசி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
T20I Rankings: தரவரிசையில் ரோஹித், கோலி, தவான் முன்னேற்றம்
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
"சுல்தான் ஆஃப் ஸ்விங்"-உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சச்சின்!
Advertisement