“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்

Updated: 03 July 2019 13:41 IST

உலகக் கோப்பைத் தொடருக்குத் தன்னை தேர்வு செய்யாதது குறித்து ராயுடு, அணித் தேர்வாளர்களை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Ambati Rayudu Trolled By Iceland Cricket, Offered Permanent Residency After World Cup Snub
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. © AFP

நடந்து வரும் உலகக் கோப்பை 2019 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி முதன்முதலில் தேர்வு செய்யப்பட்ட போது, அம்பத்தி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் ராயுடுவை சேர்த்த வாய்ப்பிருப்பதாக பேசப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பன்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து அணியில் இருந்த விஜய் ஷங்கருக்குக் காயம் ஏற்பட்டது. அவருக்கு பதில் இளம் வீரரான மாயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார். இப்படி ராயுடு, தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வந்தார். 

முன்னதாக விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்படதற்கு, அவரது ‘முப்பரிமாண' திறமை (பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்) ஆகியவையே காரணம் என்று சொல்லப்பட்டது. இதை கேலி செய்யும் வகையில் ராயுடு, “உலகக் கோப்பைத் தொடரின் முப்பரிமாணத்தையும் பார்ப்பதற்கு புதியதாக 3டி கிளாஸ் வாங்கியுள்ளேன்” என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.
 

இப்படிப்பட்ட சூழலில் ஐஸ்லாந்து கிரிக்கெட், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, “மாயன்க் அகர்வால், இதுவரை 72.33 சராசரியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே, அம்பத்தி ராயுடு தனது 3டி கிளாஸை அவிழ்த்து விடலாம். நாங்கள் தயார் செய்துள்ள கோப்புகளைப் பார்க்க ராயுடுவுக்கு சாதாரண கண்ணாடிதான் வேண்டும்” என்று கூறி அந்நாட்டில் நிரந்தரமாகக் கூடியேறுவதற்கான ஆவணங்களின் புகைப்படத்தை இணைத்துள்ளது. 

உலகக் கோப்பைத் தொடருக்குத் தன்னை தேர்வு செய்யாதது குறித்து ராயுடு, அணித் தேர்வாளர்களை விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தற்போது 13 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் நிலை கொண்டுள்ளது. தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்ளும். 


 

Comments
ஹைலைட்ஸ்
  • உலகக் கோப்பை அணியில் ராயுடு இடம் பெறவில்லை.
  • தவான், விஜய் ஷங்கருக்கு பதில்கூட ராயுடு சேர்க்கப்படவில்லை
  • தன்னை ஒதுக்கியது குறித்து ராயுடு, வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"அம்பதி ராயுடு ஒரு விரக்தியடைந்த கிரிக்கெட் வீரர்" - முகமது அசாருதீன்!
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
"ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ஊழலில் ஈடுப்பட்டுள்ளது" - குற்றம் சாட்டும் அம்பதி ராயுடு
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
ஓய்வு முடிவில்
ஓய்வு முடிவில் 'யூ-டர்ன்' அடித்திருக்கும் அம்பதி ராயுடு!
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" -
"ராயுடுவின் ட்விட்டை நான் ரசித்தேன்" - '3டி' ட்விட் குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத்!
Advertisement