உலகக் கோப்பை 2019: காயம் காரணமாக விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷஷாத்!

Updated: 07 June 2019 12:44 IST

ஷஷாதுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய இக்ராம் அலி கில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Afghanistans Mohammad Shahzad Ruled Out Of World Cup With Knee Injury
பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டத்தில் ஷஷாதுக்கு காயம் ஏற்பட்டது. © AFP

ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் முகமது ஷஷாத் காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த இரண்டு போட்டிகளையும் இழந்துள்ள இந்த அணிக்கு, இவரின் இழப்பு பின்னடைவாக அதிக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இலங்கைக்கு  எதிரான போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் தோற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை டவுண்டனில் எதிர்கொள்கிறது.

ஷஷாதுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய இக்ராம் அலி கில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டத்தில் ஷஷாதுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், உலகக் கோப்பை இரண்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினார். ஆனால், காயம் அதிகமானதால், இப்போது உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஷஷாத். 55 போட்டிகளில் ஆடி 1,843 ரன்கள் குவித்துள்ளார்.

ஷஷாதுக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ள அலி கில். ஒருநாள் போட்டிகளில் கடந்த வருடம் தான் அறிமுகமானார். 20 வயதான இவர், இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஷஷாத் காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்
  • பாகிஸ்தானுடனான பயிற்சி ஆட்டத்தில் ஷஷாதுக்கு காயம் ஏற்பட்டது
  • ஷஷாதுக்கு பதிலாக இக்ராம் அலி கில் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: காயம் காரணமாக விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷஷாத்!
உலகக் கோப்பை 2019: காயம் காரணமாக விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது ஷஷாத்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
16 பந்துகளில் 74 ரன்கள்: நான்கே ஓவரில் சேஸிங்கை முடித்த முகமது ஷெஷாத்!
16 பந்துகளில் 74 ரன்கள்: நான்கே ஓவரில் சேஸிங்கை முடித்த முகமது ஷெஷாத்!
Advertisement