சச்சினின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்...!

Updated: 05 July 2019 11:00 IST

இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 24.67 சராசரியில் 148 ரன்கள் குவித்துள்ளார் இக்ராம்.

Afghanistan Batsman Breaks Sachin Tendulkar
நேற்றைய போட்டியில் 86 ரன்கள் குவித்த போது இக்ராம்க்கு 18 வயது 278 நாட்கள் ஆகியிருந்தது © AFP

உலகக்கோப்பை தொடர் தனது கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி. 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இக்ராம் அலி கில் அதிக பட்சமாக 86 ரன்கள் குவித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் மிக இளம் வயதில் 80க்கு மேற்பட்ட ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்தார் இக்ராம்.

இது வரை இச்சாதனை சச்சின் வசம் இருந்தது. 1992 உலகக்கோப்பையில் 18 வயது 318 நாட்கள் இருந்த போது சச்சின், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 81 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் 86 ரன்கள் குவித்த போது இக்ராம்க்கு 18 வயது 278 நாட்கள் ஆகியிருந்தது.

விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன இக்ராம், குமார் சங்கக்காராவை பின்பற்றுபவர். ‘நான் பேட்டிங் செய்யும் போது சங்கக்காரா எப்போதும் என் நினைவில் இருப்பார்' என இக்ராம் தெரிவித்தார்.

மேலும் சச்சினின் சாதனையை முறியடித்து குறித்து இக்ராம் தெரிவிக்கையில், ‘சச்சினின் சாதனையை முறியடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது' என்றார்.

இதுவரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 24.67 சராசரியில் 148 ரன்கள் குவித்துள்ளார் இக்ராம்.

Comments
ஹைலைட்ஸ்
  • இக்ராம், குமார் சங்கக்காராவை பின்பற்றுபவர்
  • வெஸ்ட் இண்டிஸ் அணியை எதிர்கொண்டது ஆப்கானிஸ்தான் அணி
  • மிக இளம் வயதில் 80க்கு மேற்பட்ட ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை படைத்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
சச்சினின் டெஸ்ட் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து பவுலர்!
#On This Day
#On This Day 'காட் ஆஃப் கிரிக்கெட்' தன்னுடைய முதல் சதமடித்த நாள் இன்று!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
ஹஷிம் ஆம்லாவின் ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
"2003 உலகக் கோப்பையில் தோற்க வாக்கார் யூனிஸ்தான் காரணம்" - சோயிப்அக்தர்
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
கம்-பேக் டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மித்...!
Advertisement