தகாத வார்த்தையை மைதானத்தில் பேசியதாக ஆடம் ஸம்பா மீது புகார்!

Updated: 07 June 2019 20:11 IST

ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் ஆடம் ஸம்பா ஐசிசியின் லெவல் 1 குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

Adam Zampa Reprimanded For Using Abusive Language
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விதிமுறைகளை மீறியுள்ளார் ஆடம் ஸம்பா. © AFP

ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் ஆடம் ஸம்பா ஐசிசியின் லெவல் 1 குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் விதிமுறைகளை மீறியுள்ளார். ஆர்ட்டிக்கிள் 2.3 படி சர்வதேச போட்டியிஒல் தகாத வார்த்தைகாளால் திட்டயதற்காக இவர்மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.

ஸ்மபாவுக்கு எச்சரிக்கை மட்டுமின்று ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டுள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கின் போது 29வது ஓவரில் அம்பயர் காது கேட்க தகாத வார்த்தைகளை பேசியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஸம்பா ஐசிசி மேட்ச் ரெஃப்ரிக்கள் முன்னிலையில் தனது தவறை ஒப்புக்கொண்டார். அதனால் முறையான விசாரணை தேவையில்ல என்று கூறப்பட்டுள்ளது. 

எராஸ்மஸ் மற்றும் கஃபோனி ஆகியோரும், மூன்றாவது நடுவர் ருசித்ராவும் இதனை புகாராக பதிவிட்டனர்.

ஸம்பா, இந்த போட்டியில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
ஆடம் ஸம்பா மீதான சர்ச்சைக்கு விளக்கமளித்த ஆரோன் பின்ச்
தகாத வார்த்தையை மைதானத்தில் பேசியதாக ஆடம் ஸம்பா மீது புகார்!
தகாத வார்த்தையை மைதானத்தில் பேசியதாக ஆடம் ஸம்பா மீது புகார்!
கோலியை வீழ்த்த ஐடியா கொடுத்த இந்திய ஆல் ரவுண்டர்: ஸ்ம்பா விளக்கம்!
கோலியை வீழ்த்த ஐடியா கொடுத்த இந்திய ஆல் ரவுண்டர்: ஸ்ம்பா விளக்கம்!
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்
Advertisement