இங்கிலாந்து கால்பந்து கேப்டனுடன் செல்ஃபி... கோலியை கலாய்த்த அபிஷேக் பச்சன்

Updated: 25 May 2019 12:00 IST

செல்ஸே ரசிகரான அபிஷேக் பச்சன் டோட்டன்ஹாம் அணியை போட்டி அணியாக பார்க்க கூடியவர்.

Virat Kohli Trolled By Chelsea Fan Abhishek Bachchan For Posing With Tottenham Hotspur
டோட்டன்ஹாம் கால்பந்து வீரர் ஹாரி கேன் லார்ட்ஸ் மைதானத்தில் கோலியை சந்திதது செல்ஃபி எடுத்தார். © Twitter @HKane

விராட் கோலி இங்கிலாந்தில் உலகக் கோப்பை போட்டி தொடருக்காக சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதன் நடுவே டோட்டன்ஹாம் கால்பந்து வீரர் ஹாரி கேன் லார்ட்ஸ் மைதானத்தில் கோலியை சந்திதது செல்ஃபி எடுத்தார். இங்கிலாந்து கேப்டனான ஹாரி கேன் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு சிறந்த விளையாட்டு வீரருடன் இருப்பது மகிழ்ச்சி" என்றார். கோலியும் பதிலுக்கு இறுதிப்போட்டிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கிண்டலாக கலாய்த்துள்ளார். கோலியின் இந்தப் புகைப்படத்துக்கு பதிலாக ஒரு பதிவை பதிவிட்டார்.

செல்ஸே ரசிகரான அபிஷேக் பச்சன் டோட்டன்ஹாம் அணியை போட்டி அணியாக பார்க்க கூடியவர். அந்த அணியின் ஹாரி கேணுடன் எடுத்த புகைப்படத்துக்கு பதில் படமாக செல்ஸே அணியின் ஜெர்ஸியை வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு கலாய்த்துள்ளார்.

2014ம் ஆண்டு செல்ஸே அணிக்கு தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தை கோலி பகிர்ந்துள்ளார்.

கடந்த வருடம் இங்கிலாந்து சென்றிருந்த போது கோலி டானி இங்ஸுடன் சயிண்ட்ஸ் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்தார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஜூன் 5 முதல் போட்டியில் ஆடவுள்ளது இந்தியா. 

காயம் காரணமாக ஓய்வில் உள்ள ஹாரி கேன், ஜூன் 1 ம் தேதி  லிவர்பூல் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி இங்கிலாந்தில் உலகக் கோப்பைக்காக சென்றுள்ளார்
  • 2014ம் ஆண்டு செல்ஸே அணிக்கு தனது அன்பை வெளிப்படுத்தினார்
  • கடந்த வருடம் கோலி டானி இங்ஸுடன் சயிண்ட்ஸ் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
ரிஷப் பன்ட்டை விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த விராட் கோலி!
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை" - அப்துல் ரஸாக்
கே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி!
கே.எல்.ராகும், சிவம் துபே இருவருடன் படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"ஏழு ஆண்டுகள் கழித்து கேளுங்கள்" - விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி!
"ஏழு ஆண்டுகள் கழித்து கேளுங்கள்" - விமர்சனத்துக்கு பதிலளித்த கோலி!
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
"கோலி அல்லது காம்ப்லி?" - பிருத்வி ஷாவின் பேட்டில் இருக்கும் கையெழுத்து யாருடையது?
Advertisement