Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஷஃபாலி வர்மா: இந்திய மகளிர் அணிக்கு கிடைத்துள்ள “ராக்ஸ்டார்”!

Updated: 29 February 2020 12:29 IST

இந்திய மகளிர் அணிக்கு புதிதாக கிடைத்திருக்கும் பலம்வாய்ந்த வீரர் ஷஃபாலி வர்மா. வியாழக்கிழமை, நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில், 16 வயதான அவர் தன்னுடைய ‘போட்டி வீரர்’ விருதை இரண்டாவது முறையாக பெற்றார்.

Shafali Verma: New Pin Up Girl Of Indian Womens Team
2020 பெண்கள் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 114 ரன்கள் எடுத்துள்ளார் ஷஃபாலி வர்மா. © Twitter

இந்திய மகளிர் அணிக்கு புதிதாக கிடைத்திருக்கும் பலம்வாய்ந்த வீரர் ஷஃபாலி வர்மா. வியாழக்கிழமை, நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில், 16 வயதான அவர் தன்னுடைய ‘போட்டி வீரர்' விருதை இரண்டாவது முறையாக பெற்றார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 34 பந்திகளில் 46 ரன்கள் குவித்ததால் மூன்றாவது போட்டியை வென்றது.  தொடர்ச்சியாக மூன்று போட்டிகள் வென்றதால், அரையிறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. 

போட்டிக்கு பின் பேசிய அவர், பேட்டிங்கிற்கும் விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கும் அவருடைய தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

ஷஃபாலி, இதுவரை இந்த போட்டியில் 114 ரன்கள் குவித்துள்ளார். 16 வயதில் இதை செய்ததன் மூலம் அவர், புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை எந்த வீரரும் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக ரன்களை குவித்தது இல்லை. அதுவும் ஒரே உலகக் கோப்பையில் யாரும் செய்யாத சாதனையை ஷஃபாலி படைத்துள்ளார்.

“பெண்கள் தங்கள் நரம்புகளைப் பிடித்து நியூசிலாந்து அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஷஃபாலி வர்மா ஒரு ராக்ஸ்டார். பெண்களின் சிறப்பான ஆட்டத்தை ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று வீரேந்திர சேவாக் ட்விட் செய்தார். 

16 வயதான இவர், மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் சிக்ஸரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விலாசினார். 

சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி உள்நாட்டு போட்டியை லஹ்லியில் விளையாடுவதைப் பார்த்த பிறகு இவர், கிரிக்கெட்டில் ஈர்க்கப்பட்டார்.

இந்தியாவின் மூத்த பெண்கள் கிரிக்கெட் அணியில் நுழைந்த ஷஃபாலி, கடந்த ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். சில வாரங்கள் கழித்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்த இவர், சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இது சச்சின் டெண்டுல்கரின் 30 வருட சாதனையை முறியடித்தது.

ஹரியானாவைச் சேர்ந்த இவர், தலைமுடியை வெட்டி, தன்னை தன் சகோதரன் போல் காட்டிக்கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட வேண்டியிருந்தது. ஏனென்றால், அவர் செய்ய விரும்பியது எல்லாம், விளையாடுவது தான்.

அவருக்கு கிரிக்கெட் மீதிருந்த தீராத காதலை புரிந்துகொண்ட அவருடைய பெற்றோர், பல தடங்களுக்கு பிறகு அவருக்கு ஆதரவு அளித்தனர். ஷஃபாலியின் அச்சமற்ற அணுகுமுறை தனது 7 வயது சகோதரி நான்சி உட்பட மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று அவரது தந்தை நம்புகிறார்.

இந்திய அணி சாதனைப் படைக்க இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளது. ஐசிசி போட்டிகளில் வென்றால், இந்திய அணிக்கு இது முதல் உலகக் கோப்பை வெற்றியாக அமையும். ம்களிர் அணியின் வெற்றி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Comments
ஹைலைட்ஸ்
  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஷஃபாலி வர்மா இதுவரை 114 ரன்கள் எடுத்துள்ளார்
  • 16 வயதான மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் சிக்ஸர் அடித்தார்
  • கோப்பையை வெல்ல இந்திய அணி இன்னும் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற வேண்டும்
தொடர்புடைய கட்டுரைகள்
“ஷஃபாலி மற்றும் ஸ்மிருதிக்கு பந்து வீச விருப்பமில்லை” - ஆஸி. பந்துவீச்சாளர்!
“ஷஃபாலி மற்றும் ஸ்மிருதிக்கு பந்து வீச விருப்பமில்லை” - ஆஸி. பந்துவீச்சாளர்!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பை நட்சத்திரம் ஷஃபாலி வர்மா டி20 தரவரிசையில் முதலிடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை நட்சத்திரம் ஷஃபாலி வர்மா டி20 தரவரிசையில் முதலிடம்!
ஷஃபாலி வர்மா: இந்திய மகளிர் அணிக்கு கிடைத்துள்ள “ராக்ஸ்டார்”!
ஷஃபாலி வர்மா: இந்திய மகளிர் அணிக்கு கிடைத்துள்ள “ராக்ஸ்டார்”!
மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
Advertisement