Listen to the latest songs, only on JioSaavn.com
 

5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா

Updated: 08 March 2020 16:11 IST

IND vs AUS பெண்கள் டி 20 உலகக் கோப்பை இறுதி: நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.

Live Score, India vs Australia, ICC Womens T20 World Cup Final Match: Australia Win Toss, Elect To Bat vs India
வெற்றிக் களிப்பில் ஆஸி. அணியினர் © AFP

மெல்பர்னில் இன்று நடைபெற்ற 5 வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்காக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இந்திய அணி திணறியது. இறுதியில் 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியடைந்தது.

இதில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 78 ரன்களும், ஹீலி 75 ரன்களையும் குவித்திருந்தனர். இதே இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 ரன்களையும், வேதா 19 ரன்களையும், ரிச்சா கோஷ் 18 ரன்களையும் மட்டுமே குவித்திருந்தனர். விக்கெட்டுகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேகன் ஷாட் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜொனாசென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம், மற்றும் ராதா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.

. (LIVE SCORECARD)

Live Score Updates of India vs Australia Women's T20 World Cup Final, straight from Melbourne Cricket Ground, Melbourne

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பை: மனைவியின் ஆட்டத்தைக் காண ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டார்க்!
மகளிர் டி20 உலகக் கோப்பை: மனைவியின் ஆட்டத்தைக் காண ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டார்க்!
மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு நடுவர்களை நியமித்தது ஐசிசி!
மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு நடுவர்களை நியமித்தது ஐசிசி!
Advertisement