முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!

Updated: 09 August 2019 13:04 IST

போட்டி தடைப்பட்டதால் சோர்வடையாத விராட் கோலி, மைதானத்தில் சில நடனம் ஆடினார்.

Virat Kohli Puts On His Dancing Shoes As Rain Plays Spoilsport In 1st ODI. Watch Video
கோலி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலையும் ஆட வைத்தார். © BCCI/Twitter

குயானா நேஷ்னல் ஸ்டேடியத்தில் நேற்று நடக்கவிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இந்திய அணி சார்பாக 13 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. போட்டி தடைப்பட்டதால் சோர்வடையாத விராட் கோலி, மைதானத்தில் சில நடனம் ஆடினார். அவர் மட்டும் ஆடாமல், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலையும் ஆட வைத்தார்.

மழை வருவதற்கு முன்பாக மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்திருந்தது.

மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் கழித்து தான் தொடங்கப்பட்டது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரரான கிறிஸ் கெயில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் பந்தில் அவுட் ஆனார். முன்னாள் பேட்ஸ்மேனான ப்ரெயின் லாராவின் 10,405 ரன்களை எட்ட 9 ரன்கள் மீதமிருக்கையில் அவுட் ஆனார் கெயிஸ்.

உலகக் கோப்பைக்குப் பிறகு ஆட்டத்தின் ஒரு பக்கத்திற்கு 50 ஓவர்கள் வடிவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவை மாற்றிய கெயில், ஆட்டமிழக்கப்படுவதற்கு முன்பு 31 பந்துகளை எடுத்தார்.

கெயிலுக்கு அடுத்து ஆடிய ஈவின் லூயில் ஷாய் ஹோப்புடன் இணைந்து 36 பந்தில் 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன்பின் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

"கிரிக்கெட்டில் மிக மோசமான விஷயம், தொடங்கி இடையில் நிறுத்துவது தான்," மழை பெய்து ஆட்டம் தடைப்பட்ட பிறகு கோலி கூறினார்.

"எத்தனை முறை ஆட்டம் தடைபடுகிறதோ, ஃபீல்டில் அவ்வளவு கவனாமாக இருக்க வேண்டியுள்ளது." என்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
Advertisement