11 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை- ‘எமோஷனல்’ கிங் கோலி!

Updated: 19 August 2019 10:43 IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

Virat Kohli Reflects On 11-Year International Cricket Journey With Special Post
2008, ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடினார் கோலி © Virat Kohli/Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 11 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இது குறித்து அவர், ட்விட்டரில் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, இந்தியா சார்பில் தனது முதல் போட்டியை விளையாடினார் விராட். ஆரம்பத்திலிருந்தே தன் திறனை வெளிக்காட்டிய விராட், பல்வேறு சாதனைகளை முறியடித்தார். பல புதிய சாதனைகளைப் புரிந்தார். தொடர்ந்து ‘ரன் மெஷினாக' செயல்பட்டு வருகிறார். 

“பதின் பருவ ஆணாக 2008 ஆம் ஆண்டு இதே நாளில், 11 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தேன். கடவுள் என் மீது கருணையோடு இருந்ததை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. உங்கள் கனவுகளை பின்தொடர வலிமையும் சக்தியும் இருக்கட்டும். எப்போதும் சரியான வழியைப் பின்பற்றுங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கோலி.

2008, ஆகஸ்ட் 18 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடினார் கோலி. தற்போது அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸுக்குப் பயணம் செய்துள்ளது. இதுவரை டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியடைந்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • 11 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார் கோலி
  • இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாடினார் கோலி
  • தனது பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
ராகுல் டிராவிட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி!
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"எல்லாமே தவறாகிப்போனது" - இந்திய விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ்
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
"கோலி சிறந்த கேப்டனாக ரோஹித் மற்றும் தோனி தான் காரணம்" - கவுதம் கம்பீர்!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
Advertisement