Listen to the latest songs, only on JioSaavn.com
 

கிரிக்கெட் : ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி!! இந்தியா vs வங்கதேசம் #ScoreCard

Updated: 09 February 2020 15:59 IST

Ind Vs Ban ICC U19 World cup final Live : உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.

Ind Vs Ban U19 WC Final Live Score, India vs Bangladesh, ICC U-19 World Cup Final, IND vs BAN Match Today: Bangladesh Opt To Bowl Against India
Ind Vs Ban ICC under19 World cup final: ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. © Twitter

India vs Bangladesh, ICC U19 World cup final 2020 Live : உலகக்கோப்பை ஜூனியர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இறுதிப் போட்டியின் ஸ்கோர் கார்டை இந்தப் பகுதியில் காணலாம்…இந்திய ஜூனியர் அணி இதுவரையில் 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2018-ல் நடந்த உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வாகை சூடியது. முதன்முறையாக வங்கதேச அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை காலிறுதியிலும், நியூசிலாந்தை அரையிறுதியிலும் வங்க தேசம் வீழ்த்தியுள்ளது.

(LIVE SCORECARD)

Live Score Updates Between India vs Bangladesh ICC Under-19 World Cup Final, straight from Senwes Park, Potchefstroom.


இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு திவ்யன்ஷ் சக்சேனா மற்றும் பிரியம் கார்க் உள்ளிட்ட வீரர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 312 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அந்தப் போட்டியில் சதம் அடித்தார். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

இதேபோன்று பந்து வீச்சும் இந்தியாவிடம் வலுவாக உள்ளது. சூஷந்த் மிஷ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இடது கை ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் இந்த தொடர் முழுவதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய 297 ரன்கள் எடுத்தது. 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கையால் 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவுக்கு எதிராக இந்த தொடரில், ஒரு அணி 200 ரன்களை தாண்டியது என்றால் அது இலங்கை மட்டுமே. இதன் மூலம் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
கிரிக்கெட் : ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி!! இந்தியா vs வங்கதேசம் #ScoreCard
கிரிக்கெட் : ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி!! இந்தியா vs வங்கதேசம் #ScoreCard
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!
யு19 உலகக் கோப்பை: 5வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?
யு19 உலகக் கோப்பை: 5வது முறையாக கோப்பையை வெல்லுமா இந்தியா?
Advertisement