''நீங்கள் தான் என் இன்ஸ்ப்ரேஷன்'' - செரினா வில்லியம்ஸின் நெகிழ்ச்சியான பதிவு

Updated: 02 January 2019 15:37 IST

23 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற செரினா 2019ம் ஆண்டை ஹோப்மேன் கோப்பை போட்டியுடன் துவங்கவுள்ளார்.

"You Inspire Me": Serena Williams
8 வார கர்ப்பிணியாக ஆஸ்திரேலிய ஓப்பனை வென்ற செரினா ஜனவரி 2017ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஆடவில்லை.  © Twitter

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது பெற்றோருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதத்தில் உள்ளது. ''நீங்கள் என்னை இன்ஸ்பயர் செய்தீர்கள்'' என்ற வரிகள் மூலம் தனது பெற்றோரை புகழ்ந்துள்ளார். 37 வயதான செரினா வில்லியம்ஸ் தனது குழந்தையுடன் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

10.4 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள செரினா. அதில் "இது நாம் என்ன செய்யவில்லை என்பது பற்றி அல்ல, நாம் வேலைக்கு செல்லும் பெற்றோராக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியது. குழந்தையையும் பார்த்துக்கொண்டு நமது வேலைகளையும் சரியாக செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் தான் மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷன்" என்று தனது பெற்றோர்களை பற்றி கூறியுள்ளார். 

மேலும் தனது பெற்றோரின் ஆரம்பகால நினைவுகள் "நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழ்மனதில் பதியவைத்துள்ளது" என்றும் தெரிவித்திருந்தார்.

23 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற செரினா 2019ம் ஆண்டை ஹோப்மேன் கோப்பை போட்டியுடன் துவங்கவுள்ளார். 8 வார கர்ப்பிணியாக ஆஸ்திரேலிய ஓப்பனை வென்ற செரினா ஜனவரி 2017ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஆடவில்லை. 

கடந்த மாதம் உலக டென்னிஸ் அசோசியேஷன், தாயான பிறகு ஆட்டத்துக்கு திரும்பும் வீராங்கனைகளுக்கு சிறப்பு தகுதியை அளித்துள்ளது. "அவர்கள் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனைகளோடு ஆடமட்டார்கள்" என்று கூறியுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் ஃப்ரான்ஸின் ட்யாஃபோவுடன் இணைந்து பெடரர் இணையை எதிர் கொள்ளவிருக்கிறார். இதனை தன் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி என்று செரினா தெரிவித்துள்ளார்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும்
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிஸ் களத்தை தெறிக்கவிடப் போகும் 'முர்ரே - செரீனா' ஜோடி!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
Advertisement