5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!

Updated: 15 July 2019 10:30 IST

லண்டனில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஜேகோவிக்கும், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும் மோதினர்.

 

டென்னிஸ் ரசிகர்களுக்கு பிரமாண்ட விருந்தளித்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிக் முன்னிலை வீரர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மொத்தம் 4 மணி 57 நிமிடம் நீடித்த இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களை த்ரில் மழையில் நனையச் செய்தது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. பெண்கள் பிரிவில் ருமேனியாவின் ஹாலெப் பட்டம் வென்ற நிலையில் நேற்று ஆடவர் ஒற்றைய இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் சுவிஸ் வீரர் பெடரர், செர்பிய வீரர் ஜோகோவிக் ஆகியோர் மோதினர். பெடரர் உலகின் 3-ம் நிலை வீரராக இருக்கிறார். அவர் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சாம்பியனாகவும் உலகின் நம்பர் ஒன் வீரராகவும் இருப்பவர் ஜோகோவிக்.

இருவரும் மோதியதால் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 4 மணி 57 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6 (7/5), 1-6, 7-6 (7/4), 4-6, 13-12 (7/3) என்ற கணக்கில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிக் பட்டம் வென்றார்.

வெற்றிக்கு பின்னர் ஜோகோவிக் அளித்த பேட்டியில், ‘எனது வாழ்க்கையில் நடந்த இறுதிப் போட்டிகளில் இது மிகவும் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்திய போட்டி. அதுவும் உலகின் மிகச்சிறந்த வீரரான பெடரரை எதிர்த்து விளையாடியுள்ளேன். அவர் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு' என்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • வெற்றிக்கு பின்னர் பெடரரை புகழ்ந்துள்ளார் ஜோகோவிக்
  • சரியாக 4 மணி 57 நிமிடங்கள் ஆட்டம் நீடித்தது
  • டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று
தொடர்புடைய கட்டுரைகள்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
காயத்துக்கு பின் ஆடவந்த ஜோகோவிச் ஜப்பான் ஓப்பன் காலுறுதிக்கு தகுதி!
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
Advertisement