'என் ஆட்டம் இன்னும் முடியவில்லை...' - பெடரர் கர்ஜனை

Updated: 11 February 2019 13:34 IST

ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ரோஜர் பெடரர்

Wimbledon: Roger Federer Targets Ninth Crown
ஒன்பதாவது விம்பிள்டன் கிராண்டு ஸ்லாமை வெல்லும் முனைப்பில் உள்ளார் பெடரர் © AFP

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்டு ஸ்லாம் போட்டியில் 4வது சுற்றுடன் ரோஜர் பெடரர் வெளியேறினார். அதனால் அவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

ஜெனிவாவில் லாவர் கோப்பைத் தொடரின் அறிமுக விழா நடந்தது. அதில் பங்கேற்ற பெடரர், என் அடுத்த குறிக்கொள் விம்பிள்டன் கிராண்டு ஸ்லாமை வெல்வதுதான் என தெரிவித்தார்.

‘விம்பிள்டனை தொடர்ந்து யூஎஸ் ஓபன், மியாமி தொடர் மற்றும் லாவர் கோப்பைகளை வெல்வது தான் என் திட்டம். ஆஸ்திரேலிய ஓபன் தோல்வி என்னை பாதிக்கவில்லை. உத்வேகமும் உடல் தகுதியும் என்னிடம் உள்ளது. அதனால் தொடர்ந்து விளையாடுவேன். எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை' என ரோஜர் பெடரர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ரோஜர் பெடரர்.

செப்டம்பர் 20-22 வரை லாவர் கோப்பை நடக்கும். இதில் சக நாட்டுகாரர் வாவ்ரின்காவுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெடரர் – வாவ்ரின்கா ஜோடி, 2008 ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார் பெடரர்.
  • ஆஸ்திரேலியா ஓபனில் 4 வது சுற்றுடன் வெளியேறினார் பெடரர்
  • லாவர் கோப்பையில் வாவ்ரின்காவுடன் சேர்ந்து விளையாடவுள்ளார் பெடரர்
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Laver Cup: நடாலுக்கு
Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ
Advertisement