விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?

Updated: 12 July 2019 14:43 IST

செரினா வில்லியம்ஸ் – சைமோனா ஹாலப் எதிரான இறுதி போட்டி வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது.

Wimbledon 2019: Serena Williams To Face Simona Halep In Wimbledon Final With Record Slam Haul In View
செரினா வில்லியம்ஸ் சென்ற ஆண்டு விம்பிள்டண் பைனலிலும் யூஎஸ் ஓபன் பைனலிலும் தோல்வி அடைந்தார் © AFP

விம்பிள்டண் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் தனது கடைசி கட்டத்தை அடைந்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் செரினா வில்லியம்ஸை எதிர்த்து சைமோனா ஹாலப் போட்டியிடுகிறார்.

அரையிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைக்கோவை எளிதாக வீழ்த்தினார் செரினா வில்லியம்ஸ். இதுவரை விம்பிள்டண் கிராண்ட்ஸலாமை ஏழு முறை செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரையிறுதியில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சைமோனா ஹாலப் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தினார்.

செரினா விம்பிள்டணை வென்றால் தாய் ஆன பிறகு அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்மாக இது கருதப்படும். 37 வயதான செரினா இந்த கிராண்ட்ஸ்லாமை வெல்லும் பட்சத்தில் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.

செரினா வில்லியம்ஸ் சென்ற ஆண்டு விம்பிள்டண் பைனலிலும் யூஎஸ் ஓபன் பைனலிலும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘இறுதி போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. நான் செய்வதை விரும்பி செய்கிறேன். நான் இன்னும் சிறப்பாக விளையாடுகிறேன் என எண்ணுகிறேன்' என்றார் செரினா வில்லியம்ஸ்.

2018 பிரென்சு ஓபன் சாம்பியனான சைமோனா ஹாலப் தனது ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பைனலில் விளையாடுவார்.

‘போட்டிகள் எளிதாக இல்லை. இருப்பினும் என் முழு பலத்தில் விளையாடி வெற்றி கண்டுள்ளேன். செரினாவிற்கு எதிரான இறுதி போட்டியில் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்' என்றார் சைமோனா.

செரினா வில்லியம்ஸ் – சைமோனா ஹாலப் எதிரான இறுதி போட்டி வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • சைமோனா ஹாலப் 6-1, 6-3 என்ற செட்கணக்கில் எலினா ஸ்விட்டோலினாவை வென்றார்
  • 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்ட்ரைக்கோவை வீழ்த்தினார் செரினா
  • விம்பிள்டண் கிராண்ட்ஸலாமை ஏழு முறை செரினா வில்லியம்ஸ் வென்றுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
மாட்ரிட் ஓப்பனில் ஆடாமல் அரையிறுதிக்கு சென்ற ஜோகோவிச்!
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
Advertisement