ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த 15 வயது 'கத்துக்குட்டி' வீராங்கனை..!

Updated: 02 July 2019 11:45 IST

நயோமி ஒசாகா, அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்டெபனோஸ் சிட்சிப்பாஸ் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

Wimbledon 2019: Teenager Cori Gauff Stuns Veteran Venus Williams In 1st Round
இளம் வயது வீராங்கனை என்ற பெருமைக்குரிய கோரி, முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார் © AFP

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்திருந்தார் அமெரிக்காவின் 15 வயதான கோரி கவுப். விம்பிள்டன் தொடரில் விளையாடும் இளம் வயது வீராங்கனை என்ற பெருமைக்குரிய கோரி, முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொண்டார்.

ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அதிர்ச்சி அளித்தார் கோரி. வீனஸ் வில்லியஸிக்கும் கோரிக்கும் இடையே 24 வயது இடைவேளை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் வீன்ஸ் வில்லியம்ஸ் தவிர ஏனைய முக்கிய வீரர்களான நயோமி ஒசாகா, அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்டெபனோஸ் சிட்சிப்பாஸ் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

நயோமி ஒசாகா 7-6 (7/4), 6-2 என செட் கணக்கில் யூலியாவிடம் தோல்வி அடைந்தார். ‘நாம் முடித்து கொள்வோமா? நான் அழுது விடுவேன் என நினைக்கிறேன்' என தோல்விக்கு பின் ஒசாகா கூறினார்.

அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 4-6, 6-3, 6-2, 7-5 என செட் கணக்கில் செக் குடியரசின் ஜிரி வெசிலியிடம் தோல்வியடைந்தார்.

6-4, 3-6, 6-4, 6-7 (8/10), 6-3 என செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவிடம் தோல்வி அடைந்தார் ஸ்டெபனோஸ் சிட்சிப்பாஸ்.

Comments
ஹைலைட்ஸ்
  • வீனஸ் வில்லியம்ஸை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்றார் கோரி
  • நயோமி ஒசாகா 7-6 (7/4), 6-2 என செட் கணக்கில் யூலியாவிடம் தோல்வி அடைந்தார்
  • ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் ஆவார் வீனஸ் வில்லியமஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த 15 வயது
ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த 15 வயது 'கத்துக்குட்டி' வீராங்கனை..!
ஃபிரென்ச் ஓப்பன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய சாம்பியன்
ஃபிரென்ச் ஓப்பன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய சாம்பியன்
Advertisement