டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!

Updated: 11 July 2019 11:30 IST

யூஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் மட்டுமே இவர்கள் நேருக்கு நேர் மோதியதில்லை.

Wimbledon 2019: Rafael Nadal Sets Up Roger Federer Semi-Final Clash
பெடரர் – நடால் 40வது முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளனர். © AFP

விம்பிள்டண் தொடரின் அரையிறுதி போட்டிக்கு நோவக் ஜோகோவிச், ரபேல் நடால், ரோஜர் பெடரர் மற்றும் ராபர்டோ பாடிஸ்டா தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதியில் சாம் குவேரியை 7-5, 6-2, 6-2 என நேர் செட்களில் வென்றார் ரபேல் நடால். ரோஜர் பெடரர் தனது காலிறுதியில் ஜப்பானின் நிசிகோரியை 4-6, 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா 7-5, 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பெல்லாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதியில் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச்சை சந்திப்பார். நோவக், தனது காலிறுதியில் கோபினை 6-4, 6-0, 6-2 என நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

பெடரர் – நடால் 40வது முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளனர். விம்பிள்டண் தொடரில் பெடரர் – நடால் போட்டி நடப்பது இது நான்காவது முறையாகும். இவர்கள் மோதிய முந்தைய மூன்று விம்பிள்டண் போட்டிகளில் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் பெடரரும் 2008 யில் நடாலும் வெற்றி பெற்றனர்.

சமீபத்தில் நடந்த பிரென்சு ஓபன் தொடரின் அரையிறுதியில் பெடரரை வீழ்த்தினார் நடால். களிமண் தரையின் ராஜாதி ராஜாவக கருதப்படுபவர் நடால். டென்னிஸ் உலகின் அடையாளமாக கருதப்படுபவர் ரோஜர் பெடரர். இவர்கள் இருவரும் மோதி கொள்ளும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

களிமண் தரையில் நடத்தப்படும் பிரென்சு ஓபனை 12 முறை நடால் வென்றிருந்தாலும் அவரால் புள் தரை கிராண்ட்ஸ்லாம்களில் 2012 -2017 ஆகிய காலத்தில் நான்காவது சுற்றை கூட தாண்ட முடியாமல் தவித்தார்.

இதுவரை விம்பிள்டண் கிராண்ட்ஸ்லாமில் மூன்று முறையும் பிரென்சு ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஆறு முறையும் ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாமில் நான்கு முறையும் பெடரர் – நடால் மோதியுள்ளனர். யூஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் மட்டுமே இவர்கள் நேருக்கு நேர் மோதியதில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • அரையிறுதிக்கு ஜோகோவிச், நடால், பெடரர், பாடிஸ்டா தகுதி பெற்றுள்ளனர்.
  • 2006 மற்றும் 2007 யில் பெடரரும் 2008 யில் நடாலும் வெற்றி பெற்றனர்
  • பிரென்சு ஓபன் தொடரின் அரையிறுதியில் பெடரரை வீழ்த்தினார் நடால்.
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement