ஐ.சி.சி தர வரிசையில் முதலிடத்தில் ரோஜர் ஃபெடரர் !

Updated: 10 July 2018 23:39 IST

கிரிக்கெட் ஸ்டைலில் பந்தை தடுத்து விளையாண்ட ரோஜர் ஃபெடரரின் வீடியோவை விம்பிள்டனின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டிருந்தது

Wimbledon 2018: Roger Federer Shows Off Cricket Skills, Gets No.1 Batting Ranking From ICC
© AFP

விம்பிள்டன் 2018 தொடரின் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நான்காவது சுற்று ஆட்டத்தில் ஃப்ரான்ஸ் நாட்டின் அட்ரியன் மன்னாரினோ, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் மோதினார்.

இந்தப் போட்டியில். கிரிக்கெட் ஸ்டைலில் பந்தை தடுத்து விளையாண்ட ரோஜர் ஃபெடரரின் வீடியோவை விம்பிள்டனின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டிருந்தது. மேலும், ஃபெடரரின் கிரிக்கெட் திறனுக்கு ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) மதிப்பளிக்க வேண்டும் எனவும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப் பட்டது. 

     Ratings for @rogerfederer's forward defence, @ICC?#Wimbledon pic.twitter.com/VVAt2wHPa4  

       — Wimbledon (@Wimbledon) July 9, 2018

இதற்கு பதிலளித்த ஐ.சி.சி கிரிக்கெட் கவுன்சில், சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிசையின் முதல் இடத்தில் ரோஜர் ஃபெடரரின் பெயரை பதிவிட்டிருந்தது.

             *sigh* ok... ?? pic.twitter.com/KXnhaznxL8

            — ICC (@ICC) July 9, 2018

அதுமட்டுமின்றி, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இருவரும் ஸ்பைடர் மேன் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் ஐ.சி.சி பகிர்ந்தது

            When greatness recognises greatness ??

            pic.twitter.com/UB2hJli5gw

              — ICC (@ICC) July 9, 2018

 

தவிர, ஃப்ரான்ஸ் நாட்டின் அட்ரியனுக்கு எதிரான போட்டியில், 16 நிமிடங்களில் முதல் செட்டை கைப்பற்றிய ஃபெடரர், 6-0,7-5,6-4 என்ற செட் கணக்கில் தனது 16-வது விம்பிள்டன் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். கூடவே, 53-வது முறையாக கிரான்ட் ஸ்லாம் இறுதி எட்டுக்குள் நுழைகிறார் ரோஜர்.

 

 

Comments
ஹைலைட்ஸ்
  • கிரிக்கெட் ஸ்டைலில் ஆடிய ரோஜர்
  • விம்பிள்டன் வீடியோ வெளியீடு
  • ஐ.சி.சி-யில் இடம் பிடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Laver Cup: நடாலுக்கு
Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Advertisement