பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி

Updated: 15 July 2018 15:52 IST

கடந்த 41 ஆண்டுகளில், 30 வயதை தாண்டிய இரண்டு வீராங்கனைகள் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை

Wimbledon 2018: Angelique Kerber Beats Serena Williams To Lift Maiden Title

2018 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின், பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார்.

65 நிமிடங்கள் நடைப்பெற்ற இறுதி போட்டியில், ஏஞ்சலிக்- செரினா வில்லையம்ஸ் மோதினர். இதற்கு முன்பு, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற விம்பிள்ட்ன் இறுதி போட்டியில் இருவரும் மோதி கொண்ட நிலையில், செரினா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது முறையாக விம்பிள்டன் இறுதி போட்டியில் இருவரும் மோதி கொண்ட இந்த போட்டியில், 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் வெற்றி பெற்று சாப்பியன் பட்டம் வென்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் பெற்ற செரினா வில்லியம்ஸ், செப்டம்பர் மாதம் குழந்தைக்கு தாயானார். அதற்கு பிறகு, அவர் விளையாடும் நான்காவது தொடரான விம்பிள்டனில், பட்டம் வெல்வார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

“இறுதி போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. இனி வரும் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். வெளியில் இருக்கும் அனைத்து தாய்மார்களுக்காக நான் விளையாடினேன். என்னால் முடிந்த வரை, வெற்றி பெற முயன்றேன்” என்று செரினா உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

கடந்த 41 ஆண்டுகளில், 30 வயதை தாண்டிய இரண்டு வீராங்கனைகள் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்றது இதுவே முதல் முறை ஆகும்.

குறிப்பாக, 30வது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டியில் பங்கேற்ற செரினா, போட்டியின் தொடக்கம் முதலே சோர்வாக காணப்பட்டார். முன்னதாக நடால்- ஜோக்கோவிச் , நடைப்பெற்ற ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி போட்டியில் கூடுதல் நேரம் எடுத்துகொண்டதால், ஏஞ்சலிக்-செரினா போட்டி தாமதாக தொடங்கியது.

சாம்பியன் பட்டம் வென்ற ஏஞ்சலிக் கெர்பர், 22 ஆண்டுகளுக்கு பிறகு, விம்பிள்டன் பட்டம் பெறும் முதல் ஜெர்மனி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!
கத்தார் ஓப்பன் அரையிறுதியில் ஆஞ்சேலிக் கெர்பர்!
பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி
பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியின் சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்சலிக்; செரினா தோல்வி
Advertisement