"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா

Updated: 02 August 2019 12:17 IST

சானியா மிர்சா ஜனவரி 2020ல் மீண்டும் ஆட்டத்துக்கு திரும்பவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்காக அவர் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை.

Sania Mirza Comeback Likely In 2020, Says Second Inning Would Be A "Bonus"
சானியா மிர்சா தற்போது 4 மணி நேர பயிற்சியை துவங்கியுள்ளார். © AFP

இந்தியாவின் புகழ்மிக்க டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா ஜனவரி 2020ல் மீண்டும் ஆட்டத்துக்கு திரும்பவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்காக அவர் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு "இனி நான் ஆடுவது அனைத்துமே எனக்கு போனஸ்தான்" என்றார். அவருக்கு குழந்தை பிறந்த பின்பு இரண்டு ஆண்டுகாலம் ஆடுவதில்லை என்று முடிவெடுத்தார். அதற்கு பின் தினசரி தற்போது 4 மணி நேர பயிற்சியை துவங்கியுள்ளார். "எனது வாழ்நாளில் நான் அனைத்தையும் மகிழ்ச்சியாக கடந்துவிட்டேன். இனி நான் ஆடுவது அனைத்துமே போனஸாதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் குடும்ப வாழ்க்கையை துவங்குவதற்கு முன் 6 இரட்டையர் க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் மார்டினா ஹிங்கிஸுடன் டபள்யூடிஏ இறுதிப்போட்டியையும் வென்றார்.

"ஆகஸ்ட் மாதம் போட்டிகளுக்கு திரும்புவதாக எண்ணியிருந்தேன். தற்போது ஜனவரியில் திரும்புவேன்" என்று கூறினார். 

"எனது மகன் எனக்கு மிகப்பெரிய வரம்.  குழந்தை பிறந்த பிறகு ஆட்டத்துக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மீண்டும் ஆட்டத்துக்கு திரும்ப என் மகன் தான் பெரிய இன்ஸ்ப்ரேஷன். என்னை இனி நான் நிரூபிக்க தேவையில்லை. நான் ஆடுவேன், போட்டிபோடுவேன்" என்றார்.

"நான் உடல் ரீதியாக தயாராகாமல் போட்டியில் களமிறங்க மாட்டேன். திரும்ப வேண்டும் என்பதற்காக நான் என்னை காயப்படுத்திக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார்.

கிம் கிளஸ்டர்ஸ், குழந்தை பிறந்த பிறகு ஆடி பட்டம் வென்றார். முதல் 50 வீராங்கனைகளில் குறைவானவர்களே குழந்தை பெற்றவர்கள். டாப் 10 வீராங்கனைகளில் செரினா வில்லியம்ஸ் மட்டுமே குழந்தை பெற்ற பிறகும் ஆடுபவர்.

செரினா, குழந்தை பெற்ற பிறகும் ஆடியது தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறிய அவர், 2017ல் ஆட்டத்தில் பங்கு கொள்வதை நிறுத்தினாலும் என்னால் ஆட முடியும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. 

துபாயில் ஆஸ்திரேல்கியாவை சேர்ந்த பயிற்சியாளர் ராபர்ட்டிடம் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ள சானியா, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சானியா மிர்சா ஜனவரி 2020ல் மீண்டும் ஆட்டத்துக்கு திரும்பவுள்ளார்
  • அதற்காக அவர் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை
  • இனி நான் ஆடுவது அனைத்துமே எனக்கு போனஸ்தான்: சானியா மிர்சா
தொடர்புடைய கட்டுரைகள்
மகனின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்த சானியா மிர்சா!
மகனின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை பொழிந்த சானியா மிர்சா!
"கோலியின் கவனசிதறலுக்கு அனுஷ்கா எப்போதும் காரணமாக மாட்டார்" - சானியா மிர்ஸா
"கோலியின் கவனசிதறலுக்கு அனுஷ்கா எப்போதும் காரணமாக மாட்டார்" - சானியா மிர்ஸா
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
Advertisement