குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!

Updated: 12 March 2019 17:40 IST

சானியா நவம்பர் மாதம் முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார்.  32 வயதான சானியா இரட்டையர் பிரிவின் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கியவர்.

Sania Mirza Returns To Tennis Court For First Time After Having Baby
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார். © AFP

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பலருக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார். அதனை அவர் இப்போதும் குறைத்துக் கொள்வதே இல்லை. 2018ம் ஆண்டு அக்டோபரில் அவருக்கு குழந்தை பிறந்தது. அதற்காக ஓய்வில் இருந்த அவரை டென்னிஸ் கோர்ட்டில் பார்க்கவே முடியாத நிலை நிலவி வந்தது. குழந்தை பிறந்த பின்பு முதல் முறையாக களத்தில் சானியா டென்னிஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சானிய தனது ட்விட்டர் பக்கத்தில் ''இது இன்று நடந்தது'' என்று டென்னிஸ் ஆடும் வீடியோவை பதிவிட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

சானியா நவம்பர் மாதம் முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார்.  32 வயதான சானியா இரட்டையர் பிரிவின் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கியவர். அக்டோபர் 2017 முதல் போட்டிகளை சந்திக்காத சானியா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சானியா,  குழந்தை பிறந்தது எந்த விதத்திலும் தனது கனவுகளுக்கு தடையாக இருக்காது என்பதை உணர்த்த விரும்புவதாக கூறினார்.

செரினா வில்லியம்ஸ், கிம் கிளிஸ்டர்ஸ் ஆகியோரை போல சானியாவும் குழந்தை பிறந்து டென்னிஸ் உலகை வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ப்பமாக இருந்த போதே 2017ல் ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டம் வென்றார் செரினா. கிம் கிளிஸ்டர்ஸ் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆடிய பின்னரே ஓய்வு பெற்றார்.

சானியா 2005ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒற்றையர் பட்டம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆவார்.

Comments
ஹைலைட்ஸ்
  • சானியா மிர்சா, ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷனாக இருந்துள்ளார்
  • குழந்தை பிறந்த பிறகு சானியா டென்னிஸ் ஆடும் வீடியோ வெளியானது
  • முதல் போட்டிகளுக்கு தயாராவதற்காக ஜிம் பயிற்சிகளை துவங்கினார்
தொடர்புடைய கட்டுரைகள்
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
Advertisement