நடுவருடன் செரினா மோதல்; சர்ச்சையில் முடிந்த அமெரிக்க ஓபன்!

Updated: 09 September 2018 13:30 IST

போட்டி விதிமீறல்கள் காரணமாக செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டது

Watch: Serena Williams Lashes Out At Chair Umpire, Calls Him Thief During US Open Final

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க்கில் நடைப்பெற்று வருகின்றன. மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடைப்பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினார்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செரினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி தொடங்கிய பின், 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை ஒஸாகா கைப்பற்றினார். அப்போது செரினாவை பார்த்து, அவரது பயிற்சியாளர் கைகளால் செய்கை செய்துள்ளார். இதனைப் போட்டி நடுவர் கார்லோஸ் ராமோஸ் கண்டித்துள்ளார்.

நடுவரின் கண்டிப்பால் அதிருப்தி அடைந்த செரினா, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனது பயிற்சியாளர் வெற்றி பெற வேண்டும் என்றே செய்கை செய்தார். நான் ஏமாற்றவில்லை. என்னுடைய புள்ளிகளை ஒரு திருடனைப் போல நீங்கள் பறித்து கொண்டீர்கள்” என்று கடுமையான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

போட்டி விதிமீறல்கள் காரணமாக செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. எனவே, 4-6 என்ற புள்ளி கணக்கில், இரண்டாவது செட்டை ஒஸாகா கைப்பற்றி போட்டியில் வெற்றிப் பெற்றார். இதனால், போட்டியின் இறுதியில் கண்ணீருடன் செரினா விடைப்பெற்றார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
Advertisement