அமெரிக்க ஓபன்: இறுதி போட்டியில் செரினா - ஒஸாகா மோதல்

Updated: 08 September 2018 10:37 IST

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோத உள்ளனர்

History At Stake As Serena Williams, Naomi Osaka Meet In US Open Final
© AFP

2018 அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நியூயார்க்கில் நடைப்பெற்று வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோத உள்ளனர். இதுவரை 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரினாவுக்கு எதிராக 20 வயது இளம் வீராங்கனை ஒஸாகா மோத உள்ளார்.

தனக்கு பெண் குழந்தை பிறந்து ஓராண்டிற்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி போட்டிக்கு முதல் முறையாக செரினா தகுதி பெற்றுள்ளார். எனவே, இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று வரலாறு படைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

கடந்த 22 ஆண்டுகளில், அமெரிக்க ஓபன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை ஒஸாகா பெற்றுள்ளார். அமெரிக்க ஓபன் தொடக்க போட்டிகளில் இருந்தே ஒஸாகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே, இறுதி போட்டியில் செரினாவுக்கு எதிராக கடும் போட்டி அளிப்பார் என்று கணிக்கப்படுகிறது

இரு போட்டியாளர்களும் பட்டம் வெல்வதில் முனைப்பாக உள்ளதால், இறுதி போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி இறுதி போட்டி நடைப்பெற உள்ளது
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
Advertisement