அரையிறுதியில் பெடரர் - நடால் போட்டியை எதிர்பார்க்கலாமா? விம்பிள்டண் அப்டேட்...!

Updated: 09 July 2019 11:55 IST

காலிறுதியில் நடால் மற்றும் பெடரர் தங்களது போட்டிகளை வெல்லும் பட்சத்தில் அரையிறுதியில் நடால் – பெடரர் ஆட்டம் நடைபெறும்.

Rafael Nadal, Novak Djokovic, Roger Federer Untroubled At Wimbledon As Monday Proves Not So Manic
7 வது முறையாக விம்பிள்டண் காலிறுதிக்கு முன்னேறினார் நடால் © AFP

நடைபெற்று கொண்டிருக்கும் விம்பிள்டண் தொடரானது காலிறுதியை எட்டியுள்ளது. முதல் சில சுற்றுகளில் வீனஸ் வில்லியம்ஸ், நயோமி ஒசாகா, வாவ்ரின்கா முதலிய முக்கிய வீரர்கள் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினர்.

ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் முனைப்பில் இருப்பவர்களாக நோவக் ஜோகோவிக், ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இம்மூவரும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிக் 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரென்சு நாட்டை சேர்ந்த யூகோ ஹும்பேர்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அவர் 11 வது முறையாக விம்பிள்டண் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் அவர் தகுதி பெறும் 45 வது மேஜர் காலிறுதி இதுவாகும்.

2008, 2010 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டண் கோப்பையை வென்ற நடால் 6-2, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோவா சோசாவை வீழ்த்தி 7 வது முறையாக விம்பிள்டண் காலிறுதிக்கு முன்னேறினார்.

8 முறை விம்பிள்டண் சாம்பியனான பெடரர் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் மாட்டியோ பெரித்தினியை வீழ்த்தி தனது 55வது கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டண் தொடரில் 17 வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் பெடரர்.

காலிறுதியில் ஜோகோவிக், பெல்ஜியத்தின் டேவிட் கோப்பினை சந்திக்கிறார். நடால் காலிறுதியில் சாம் குவாரேவை எதிர்த்து விளையாடுவார். காலிறுதியில் நடால் மற்றும் பெடரர் தங்களது போட்டிகளை வெல்லும் பட்சத்தில் அரையிறுதியில் நடால் – பெடரர் ஆட்டம் நடைபெறும்.

Comments
ஹைலைட்ஸ்
  • 11 வது முறையாக விம்பிள்டண் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜோகோவிக்
  • 2008, 2010 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டண் கோப்பையை வென்றார் நடால்
  • விம்பிள்டண் தொடரில் 17 வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் பெடரர்
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement