தலைக்கு வந்தது கூரையோடு போச்சு - நடுவரை நோக்கி பாய்ந்த ஸ்பைடர் கேமரா!

Updated: 21 January 2019 20:44 IST

ஹூக்ஸ் நடுவராக இருந்தார். அவரது தலைக்கு மேல் பறந்த ஸ்பைடர் கேமரா கூரையை தட்டி விட்டு பறந்தது.

Australian Open: Chair Umpire Survives Close Call After Spider-Cam Malfunction
சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க நடுவர் இருக்கையின் மீது மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. © AFP

ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் நடுவரின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் செயல் நடந்துள்ளது. சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க நடுவர் இருக்கையின் மீது மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. ஹூக்ஸ் நடுவராக இருந்தார். அவரது தலைக்கு மேல் பறந்த ஸ்பைடர் கேமரா கூரையை தட்டி விட்டு பறந்தது. அருகில் இருந்தவர்கள் மீதும் கூரை விழாமல் பாதுகாப்பாக விழுந்தது. ஆனால் நடுவர் சில நிமிடம் நிலை குலைந்து போனார்.

இந்த நிகழ்வு பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷரபோவாவும், பார்டியும் மோதினர். இந்த நிகழ்வை குறித்து, பாதுகாப்பு அவசியம் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மைதானத்தில் பறந்த படி அனைத்து கோணங்களிலும் படம் பிடிக்கும் ஸ்பைடர் கேமரா கேபிள் இடிந்து இந்த விபத்து நடந்துள்ளது. அதன் பின்பு மொத்த கூரையையும் கழற்றிவிட்டு போட்டி நடந்துள்ளது. தலைக்கு வந்தது கூரையோடு சென்றது என்ற விமர்சனங்களையும் காண முடிந்தது.

இதற்கு காரணம் ஸ்பைடர் கேமராவில் ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறு என்று கூறப்படுகிறது. இந்த போட்டியில் ஷரபோவா 4-6,6-1,6-4 என்ற கணக்கில் தோற்றார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஸ்பைடர் கேமரா மேற்கூரை தட்டி விட்டதும் நடுவர் நிலை குலைந்து போனார்
  • சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்க இருக்கையின்மீது மேற்கூரை அமைக்கப்பட்டது
  • இந்த நிகழ்வு பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆஃப் 16சுற்றில் நடைபெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
தலைக்கு வந்தது கூரையோடு போச்சு - நடுவரை நோக்கி பாய்ந்த ஸ்பைடர் கேமரா!
தலைக்கு வந்தது கூரையோடு போச்சு - நடுவரை நோக்கி பாய்ந்த ஸ்பைடர் கேமரா!
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
விம்பிள்டன் 2018 : கவனிக்கப்பட வேண்டிய 6 சூப்பர் லேடீஸ்
Advertisement