அமெரிக்க ஓபன்: 6 முறை சாம்பியனான செரினா இறுதிக்குத் தகுதி!

Updated: 07 September 2018 09:58 IST

திருமணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு, செரினா தகுதி பெறும் இரண்டாவது கிராண்டு ஸ்லாம் இறுதிப் போட்டி இது. இதற்கு முன்னர் விம்பிள்டன் இறுதியில் அவர் விளையாடினார்

US Open: Six-Time Champion Serena Williams Storms Into Final
© AFP

உலக டென்னிஸ் வரலாற்றில் 6 முறை அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற செரினா வில்லியம்ஸ், இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இது அவர் தகுதி பெறும் 9வது இறுதிப் போட்டியாகும். 

திருமணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு, செரினா தகுதி பெறும் இரண்டாவது கிராண்டு ஸ்லாம் இறுதிப் போட்டி இது. இதற்கு முன்னர் விம்பிள்டன் இறுதியில் அவர் விளையாடினார்.

அமெரிக்க ஓபன் அரையிறுதிப் போட்டியில், செரினா, அனஸ்தசிஜா செவஸ்தோவாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் செரினா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் செவஸ்தோவாவை துவம்சம் செய்து இறுதிக்குள் நுழைந்தார். 

போட்டி முடிந்த பிறகு பேசிய செரினா, ‘உண்மையில் இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. ஓர் ஆண்டுக்கு முன்னர் நான் குழந்தை பெற்ற பிறகு மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது களத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இது அளவு கடந்த சந்தோஷத்தைத் அளிக்கிளது. கடந்த சில மாதங்களாக மிகவும் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்றார் ஆனந்தத்துடன்.

வரும் சனிக் கிழமை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை செரினா எதிர்கொள்வார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ்ஆஸ்திரேலிய ஓபன் 2வது சுற்றில் தோல்வி!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
Advertisement