நடுவருடன் செரினா மோதல் : 17,000 அமெரிக்க டாலர் அபாரதம் விதித்த டென்னிஸ் ஆணையம்!

Updated: 10 September 2018 12:26 IST

1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது

Serena Williams Fined $17,000 After US Open Final Outburst
© AFP

அமெரிகக் ஓபன் டென்னிஸின் இறுதி போட்டியில், நடுவரை தரக்குறைவாக பேசிய குற்றத்தால், செரினா வில்லியம்ஸிற்கு 17,000 அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து, அமெரிக்க டென்னிஸ் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்கன் ஓபன் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் செரினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி தொடங்கிய பின், 2-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை ஒஸாகா கைப்பற்றினார். அப்போது செரினாவை பார்த்து, அவரது பயிற்சியாளர் கைகளால் செய்கை செய்துள்ளார். இதனைப் போட்டி நடுவர் கார்லோஸ் ராமோஸ் கண்டித்துள்ளார்.

நடுவரின் கண்டிப்பால் அதிருப்தி அடைந்த செரினா, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனது பயிற்சியாளர் வெற்றி பெற வேண்டும் என்றே செய்கை செய்தார். நான் ஏமாற்றவில்லை. என்னுடைய புள்ளிகளை ஒரு திருடனைப் போல நீங்கள் பறித்து கொண்டீர்கள்” என்று கடுமையான வார்த்தைகளால் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

போட்டி விதிமீறல்கள் காரணமாக செரினாவின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நடுவரை தரக்குறைவாக பேசியது, ராக்கெட்டை கீழே வீசியது போன்ற காரணங்களுக்காக அமெரிக்கா டென்னிஸ் ஆணையம் செரினாவிற்கு அபாரம் விதித்தது. இந்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
நோவக், செரினா வெற்றி... பிரெஞ்ச் ஓபன் அப்டேட்!
''அம்மா, சாம்பியன், அரசி, கடவுள் '' செரினாவின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்
நீண்ட நாள் காதலியை மணக்கிறார்
நீண்ட நாள் காதலியை மணக்கிறார் 'கிங் ஆஃப் க்ளே' ரஃபேல் நடால்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் செரினா..!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் செரினா..!
''நீங்கள் தான் என் இன்ஸ்ப்ரேஷன்'' - செரினா வில்லியம்ஸின் நெகிழ்ச்சியான பதிவு
Advertisement