ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்

Updated: 07 August 2019 18:13 IST

மற்ற விளையாட்டிலிருந்து அமெரிக்க கால்பந்து வீரர் அலெக்ஸ் மோர்கன் 12வது இடத்தில் உள்ளார். ஒப்புதல் தொகையாக மட்டும் அவர் 5.8 மில்லியன் டாலர் பெறுகிறார்

Serena Williams Again Tops Forbes List Of Highest-Paid Sports Women
அமெரிக்க டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அதிகம் சம்பாதிக்கு பெண் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். © AFP

அமெரிக்க டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அதிகம் சம்பாதிக்கு பெண் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியன் பெற்ற இவர் 29.2 மில்லியன் டாலர் சம்பாதித்ததாக பிசினஸ் பத்திரிகை கணக்கிட்டுள்ளது. இதில் 4.2 மில்லியன் டாலர் மட்டும் தான் பரிசு தொகையாக பெற்றுள்ளார்.

2018 யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் வில்லியம்ஸை அதிர்ச்சியடையச் செய்து, ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா, ஒரு வருடத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய நான்காவது பெண்மணி என்ற பெருமையை பெற்றார். வில்லியம்ஸ் மற்றும் டென்னிஸ் நட்சத்திரங்கள் மரியா ஷரபோவா மற்றும் லி நா ஆகியோருக்கு அடுத்து உள்ளார்.

ஒசாக்காவின் வருவாயை 24.3 மில்லியனாகக் கொண்டு, டென்னிஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர் 11.8 மில்லியன் டாலர் வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து இந்த ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் உள்ளார்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் பரிசு தொகை, சம்பளம், போனஸ், ஒப்புதல் மற்றும் தோற்ற தொகை ஆகியவை ஜூன் 1, 2018 முதல் ஜூன் 1, 2019 வரை கணகிடப்பட்டுள்ளது

மற்ற விளையாட்டிலிருந்து அமெரிக்க கால்பந்து வீரர் அலெக்ஸ் மோர்கன் 12வது இடத்தில் உள்ளார். ஒப்புதல் தொகையாக மட்டும் அவர் 5.8 மில்லியன் டாலர் பெறுகிறார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் தாய் கோல்ஃப் வீரர் அரியா ஜுடானுகர்ன் ஆகிய டென்னிஸ் அல்லாத மற்ற போட்டிகளில் உள்ள வீரர்கள் முதல் 15 இடத்துக்குள் உள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
செரீனா வில்லியம்ஸ், குஸ்நெட்சோவா ஆக்லாந்தில் போட்டியை மீண்டும் தொடங்கவுள்ளனர்!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
காயம் காரணமாக வார்ம்-அப் போட்டியிலிருந்து விலகினார் ஆண்ட்ரெஸ்கு!
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
ஃபோர்ப்ஸ் 2019: விளையாட்டில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் பட்டியலில் மீண்டும் செரினா முதலிடம்
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டண் பிந்தைய தரவரிசை வெளியிடு
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
விம்பிள்டனில் செரினாவின் கனவை தகர்ப்பாரா ஹாலப்?
Advertisement