''இஸானை பிரிவது என்பது கடினமான விஷயம்'' சானியா மிர்ஸா நெகிழ்ச்சி

Updated: 20 December 2018 12:49 IST

அக்டோபர் 30ம் தேதி பாகிஸ்தான் வீரர் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா (Sania Mirza) இணைக்கு ஆண்குழந்தை பிரந்தது.

Sania Mirza Tweets Picture With Son Izhaan, Says Difficult Staying Away From Him
31 வயதான சானியா மிர்ஸா 2019ம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். © Twitter

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தனது மகன் இஸானுடன் உள்ள ஒரு புகைப்படத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் '' வீட்டிலிருக்கும் இஸானை பிரிந்து இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதைப்பற்றி நினைத்து பார்க்கவே முடியவில்லை. இதையெல்லாம் நான் கடந்து ஆகவேண்டும்'' என்று ட்விட் செய்துள்ளார். 

கடந்த அக்டோபர் 30ம் தேதி பாகிஸ்தான் வீரர் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா இணைக்கு ஆண்குழந்தை பிரந்தது. அவர்கள் குழந்தைக்கு இஸான் மிர்ஸா மாலிக் என்று பெயரிட்டனர். தன் குழந்தை வளரும் வரை டென்னிஸ் பக்கம் திரும்பப்போவதில்லை என்று சானியா முடிவெடுத்துள்ளார்.

31 வயதான சானியா மிர்ஸா 2019ம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். அதுவும் செப்டம்பருக்கு மேல் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. சானியா தான் டபள்யூடிஏ பட்டம் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை. 

மார்ட்டினா ஹிங்கிஸூடன் இணைந்து மூன்று க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் சானியா. இவர்கள் விம்பிள்டன், அமெரிக்க ஒப்பன்களை 2015லும், ஆஸ்திரேலிய ஓப்பனை 2016லும் வென்றனர்.

மகேஷ் பூபதியுடன் இணைந்து 3 பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
''சோ க்யூட்'' இஸானின் சிரிக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்ஸா!
''இஸானை பிரிவது என்பது கடினமான விஷயம்'' சானியா மிர்ஸா நெகிழ்ச்சி
Advertisement