பி.வி சிந்து, ஜோஷ்னா சின்னப்பா 'ஆன்ட்டி': வைரலான சானியா மிர்ஸா செல்ஃபி!

Updated: 29 November 2018 15:36 IST

இந்திய பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் குழந்தையைப் பார்க்க வந்ததை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சானியா மிர்ஸா

Sania Mirza Thanks "Auntie" PV Sindhu And Joshna Chinappa For Visiting Baby Izhaan
சானியா மிர்ஸா, பி வி சிந்து மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். © Twitter

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் வீரர் மாலிக் தம்பதிக்கு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இஸான் என பெயரிட்டனர். தங்கள் குழந்தையை பார்க்க வந்த இந்திய விளையாட்டு வீராங்கனைகளுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை சானியா மிர்ஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.  

இதற்கு பிவி சிந்து தனது பதிவில் "இஸான் ரியலி க்யூட்" என்று பதிவிட்டு இந்தச் செல்ஃபியை பகிர்ந்துள்ளார்.

இந்திய பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் பார்க்க வந்ததை இஸானின் 'ஆன்ட்டிகள்'  என்று பகிர்ந்து தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சானியா மிர்ஸா.

'மிர்ஸா மாலிக்' என்ற பெயர் தன் குழந்தையின் பெயரோடு இருக்கும் என்று தான் தாயவதற்கு முன்னரே தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குள் ஆட்டத்துக்கு திரும்பும் எண்ணத்தில் இருப்பதாக சானியா தெரிவித்துள்ளார். 

செரினா வில்லியம்ஸ், கிம் கிலிஸ்டெர்ஸ் ஆகியோர் குழந்தை பெற்றுக்கொண்டு ஆடவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
Advertisement