''சோ க்யூட்'' இஸானின் சிரிக்கும் படத்தை வெளியிட்ட சானியா மிர்ஸா!

Updated: 24 December 2018 14:26 IST

அக்டோபர் 30ம் தேதி பாகிஸ்தான் வீரர் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா இணைக்கு ஆண்குழந்தை பிறந்தது.

Sania Mirza Shares Son Izhaan’s Smiling Picture On Instagram
சானியா மிர்ஸாவுக்கு கடந்த அக்டோபர் 30ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. © Instagram

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தனது மகன் இஸானின் படத்தைப் பகிர்ந்து வருகிறார். 2 மாத குழந்தையான இஸான் சிரிப்பது போன்ற தெளிவான படத்தை வெளியிட்டிருந்தார். அதில் "வேகமாக நகரும் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக உள்ளது" என்று ட்விட் செய்திருந்தார். 

முன்னதாக ஒரு ட்விட்டர் பதிவில்  ''வீட்டிலிருந்து இஸானை பிரிந்து இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதைப்பற்றி நினைத்து பார்க்கவே முடியவில்லை. இதையெல்லாம் நான் கடந்து ஆகவேண்டும்'' என்று ட்விட் செய்திருந்தார்.

கடந்த அக்டோபர் 30ம் தேதி பாகிஸ்தான் வீரர் மாலிக் மற்றும் சானியா மிர்ஸா இணைக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தைக்கு இஸான் மிர்ஸா மாலிக் என்று பெயரிட்டனர். தன் குழந்தை வளரும் வரை டென்னிஸ் பக்கம் திரும்பப்போவதில்லை என்று சானியா முடிவெடுத்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Living life in the fast lane can be fun !!! It's time to say hello to the world #Allhamdulillah

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

31 வயதான சானியா மிர்ஸா 2019ம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். அதுவும் செப்டம்பருக்கு மேல் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. சானியா தான் டபள்யூடிஏ பட்டம் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை. 

மார்ட்டினா ஹிங்கிஸூடன் இணைந்து மூன்று க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் சானியா. இவர்கள் விம்பிள்டன், அமெரிக்க ஒப்பன்களை 2015ம் ஆண்டும், ஆஸ்திரேலிய ஓப்பனை 2016ம் ஆண்டும் வென்றனர். மகேஷ் பூபதியுடன் இணைந்து 3 பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
Advertisement