மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட சானியா மிர்ஸா!

Updated: 22 November 2018 15:33 IST

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் சோயப் மாலிக் தம்பதியினருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

Sania Mirza Shares An Adorable Moment With Son Izhaan - See Picture
சானியா மிர்ஸா மற்றும் சோயப் மாலிக் அவர்கள் குழந்தைக்கு 'இஸான் மிர்ஸா மாலிக்' என பெயரிட்டுள்ளனர். © Twitter

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிகெட் வீரர் சோயப் மாலிக் தம்பதியினருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 'இஸான் மிர்ஸா மாலிக்' என பெயரிட்டுள்ளனர். சானியா மிர்ஸா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் குழந்தையோடு இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். குழந்தையின் பெயர் பதியப்பட்டிருக்கும் போர்வையை அந்தக் குழந்தைக்கு போர்த்தியபடி, சானியா மிர்ஸாவின் தோள்களில் சாய்ந்திருப்பது போல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, 'தருணங்கள்' மற்றும் 'அல்லமதுல்லா' என்று குறிப்பிட்டிருந்தார்.

சோயப் மாலிக், குழந்தை பிறந்தவுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இதை தெரிவிக்க நாங்கள் மிகவும் உற்சாகமாக உள்ளோம். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. என்னுடைய பெண்ணும் எப்போதும் போல வலிமையுடன் இருக்கிறார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

குழந்தை பிறந்த ஐந்து நாட்களுக்கு பிறகு சானியா மிர்ஸா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நாங்கள் பிறந்து ஐந்து நாட்களே ஆகின்றன. நான் ஒரு தாயாகவும், எனக்கு ஒரு மகன் இஸான் பிறந்தும் ஐந்து நாட்கள் ஆகின்றன. நாங்கள் பிறந்த பிறகு, அப்பா கிரிகெட் விளையாடியதையும் பார்த்தோம். நானும் சோயபும், இஸான் பிறந்ததற்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். அனைவரின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. லவ், சானியாம் சோயப் மற்றும் இஸான்" என்று பதிவிட்டிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
திருமணத்துக்கு முந்தைய நாளில் ஹசன் அலிக்கு வாழ்த்து சொன்ன சானியா மிர்ஸா!
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
"இனி நான் ஆடுவது எல்லாமே போனஸ்தான்" - கம்பேக் பற்றி சானியா மிர்சா
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி... கிண்டல் விளம்பரங்களை சாடிய சனியா மிர்ஸா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் களத்தில் சானியா மிர்சா!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
புல்வாமா தாக்குதல் : பிப். 14 இந்தியாவுக்கு கறுப்பு தினம் - சானியா இரங்கல்!
Advertisement