Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஆஸ்திரேலிய ஓப்பன் மூலம் மீண்டும் களம் காண்கிறார் சானியா மிர்சா

Updated: 28 November 2019 21:24 IST

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை மணந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் என பெயரிட்டனர்.

Sania Mirza Set For Tennis Comeback In Hobart
ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ராஜீவ் ராமுடன் இணைவார். © AFP

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை மணந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் என பெயரிட்டனர்.

இதனால் சில காலம் டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியிருந்த சானியா தற்போது மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஹோபர்ட்டில் நடைபெறும் போட்டியில் அணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மும்பை தொடரிலேயே களமிறங்கும் எண்ணம் இருந்ததாகவும், ஆனால் மணிக்கட்டு காயம் முழுமையாக சரியாகாததால் 50 சதவிகித உடல்தகுதியே பெற முடிந்தது. அதனால் அந்த தொடரை மிஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய ஓப்பனுக்கு முழு உடல் தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

குழந்தை பெற்ற பின்பு நிறைய அனுபவம் பெற்றிருப்பதாக தெரிவித்தார். ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறும் தொடரில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் இணைந்து ஆடப்போவதாக கூறியுள்ளார்.

சானியா 2005ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒற்றையர் பட்டம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆவார். 2007ல் டாப் 30 வீராங்கணை பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்தார்.

மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து மூன்று க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 

Comments
Advertisement