தன்னிகரற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரரின் மகத்தான சாதனை...!!!

Updated: 03 March 2019 14:41 IST

பெடரர், 6-4, 6-4 என செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

Roger Federer Wins "Special" 100th Title By Beating Stefanos Tsitsipas At Dubai Championships
பெடரர் வெல்லும் 100 வது பட்டம் இது © AFP

இந்த தலைமுறையின் ஆக சிறந்த விளையாட்டு வீரர் என்றால் அது ரோஜர் பெடரர் தான். மற்ற விளையாட்டு ஜாம்பவான்களான சச்சின், டைகர் வுட்ஸ், லீவிஸ் ஹாமில்டன், லின் டான் என பலர் இருந்தாலும் பெடரர் தனி ரகம் தான்.

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ அது போல் டென்னிஸ் விளையாட்டிற்கு பெடரர். டென்னிஸ் உலகின் ஏறத்தாள அனைத்து சாதனைகளுக்கும் சொந்தகாரர் ரோஜர் பெடரர்.

தற்போது மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் உலகில் 100 வது பட்டத்தை பெடரர் வென்றுள்ளார். இதுவரை ஜிம்மி கானர்ஸ் மட்டுமே டென்னிஸில் 100 பட்டங்களுக்கு மேல் வென்றுள்ளார்.

நேற்று நடந்த துபாய் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெடரர், ஸ்டிபனோஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர், 6-4, 6-4 என செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

‘இந்த தொடரில் 8 வது பட்டத்தையும் என் டென்னிஸ் வாழ்வின் 100 வது பட்டத்தை வெல்வதும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இந்த தொடரில் பல அற்புதமான வீரர்களுக்கு எதிராகவே விளையாடியுள்ளேன்' என பெடரர் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

109 பட்டங்களை வென்றுள்ள ஜிம்மி கானர்ஸ் சாதனையை விரைவில் பெடரர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Comments
ஹைலைட்ஸ்
  • தனது 100 வது பட்டத்தை பெடரர் வென்றார்
  • துபாய் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்
  • பெடரர் வெல்லும் 8 வது துபாய் சாம்பியன்ஷிப் இதுவாகும்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
Advertisement