களிமண் டென்னிஸுக்கு கம்-பேக் கொடுக்கும் பெடரர்..!

Updated: 21 February 2019 18:08 IST

மாட்ரிட் ஓபனில் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் பெடரர் விளையாடினார்

Roger Federer To Play On Clay At Madrid Open
மூன்று முறை மாட்ரிட் ஓபனை பெடரர் வென்றுள்ளார். © PTI

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்த ஆண்டு பிரென்ச் ஓபன் கிராண்டு ஸ்லாம் போட்டியில் விளையாட  இருக்கிறார். அதற்கு முன்னோட்டமாக மாட்ரிட் ஓபனில் விளையாடுகிறார் ஃபெடரர்.

டென்னிஸ் உலகில் ராஜாவாக பெடரர் வலம் வந்தாலும், களிமண் டென்னிஸ் போட்டிகளில் ராஜாதி ராஜா நடால்தான்.

களிமண் தரையில் நடத்தப்படும் பிரென்ச் ஓபனை ஒரேயொரு முறைதான் பெடரர் வென்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரென்ச் ஓபனில் பெடரர் விளையாடவில்லை.

மாட்ரிட் ஓபனிலும் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் பெடரர் விளையாடினார். 2006, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் மாட்ரிட் ஓபனை வென்றார் பெடரர்.

பிரென்ச் ஓபனில் விளையாடும் முன்பு மாட்ரிட் ஓபனில் விளையாடுவது நல்ல பயிற்சியாக இருக்கும் என ரோஜர் பெடரர் எண்ணியுள்ளார்.

20 கிராண்டு ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா கிராண்டு ஸ்லாமில் 4வது சுற்றுடன் வெளியேறினார்.

‘டென்னிஸ் உலகின் சிறந்த வீரரான ரோஜர் பெடரர், மாட்ரிட் ஓபனில் விளையாடவுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது' என மாட்ரிட் ஓபன் தொடரின் தலைவர் ஃபெலிகானோ லோபஸ் தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • மாட்டித் ஓபனில் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் பெடரர் விளையாடினார்
  • களிமண் தரையில் நடத்தப்படும் பிரென்ச் ஓபனை ஒரு முறை தான் பெடரர் வென்றார்
  • . 2006, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் மாட்ரித் ஓபனை வென்றார் பெடரர்.
தொடர்புடைய கட்டுரைகள்
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒரே பிரிவில் ஜோகோவிச், பெடரர் - முதலிடத்தை பெறுவாரா ஜோகோவிச்?
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
Advertisement