மூன்றாண்டுகளுக்கு பின் பிரென்ச் ஓபனில் 'கம்-பேக்' கொடுக்கும் பெடரர்..!

Updated: 21 January 2019 21:07 IST

களிமண் தரையில் விளையாடப்படும் பிரென்ச் ஓபன் தொடரில் கடைசியாக 2015 –யில் விளையாடினார் பெடரர்.

Roger Federer To Play French Open For First Time Since 2015
ஆஸ்திரேலியா ஓபனில் நான்காவது சுற்றுடன் வெளியேறினார் ரோஜர் பெடரர் © AFP

3 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு பிரென்ச் ஓபன் தொடரில் விளையாட உள்ளார் ரோஜர் பெடரர்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், 4 வது சுற்றில் 20 வயதான ஸ்டெபனோஸ்யிடம் தோற்று அதிர்ச்சி கொடுத்தார் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர். 6-7(11/13), 7-6(7/3), 7-5, 7-6(7/5) என்ற செட் கணக்கில் பெடரர் தோற்று, ஆஸ்திரேலிய ஓபனுக்கு பை-பை சொன்னார்.

இந்த வெற்றிக்குப் பின்னர் ஸ்டெபனோஸ் பேசுகையில், ‘உலகத்தில் மிகவும் சந்தோஷமான ஆள் நானாகத்தான் இருக்க வேண்டும்' என்றார். மேலும் பெடரர் ஒரு ஜாம்பவான் என்றும் அவரை வென்றது கனவாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

களிமண் தரையில் விளையாடப்படும் பிரென்ச் ஓபன் தொடரில் கடைசியாக 2015 –யில் விளையாடினார் பெடரர். காயம் காரணமாக 2016 –யில் விளையாடாத பெடரர், 2017 மற்றும் 2018 இல் பிரென்ச் ஓபனில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.

பிரென்ச் ஓபனைப் பொறுத்தவரை 'கிங்' ரஃபேல் நடால் தான். 2009 ஆண்டு பிரென்ச் ஓபனை பெடரர் வென்றார். நடால் இதுவரை 11 முறை பிரென்ச் ஓபன் சாம்பியனாகியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், பிரென்ச் ஓபனுக்கு கம்-பேக் கொடுக்க உள்ளார் பெடரர்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா ஓபனில் 4 வது சுற்றுடன் வெளியேறினார் பெடரர்
  • 3 ஆண்டுகளுக்கு பின் பிரென்ச் ஓபனில் விளையாடவுள்ளார் பெடரர்
  • 2009 யில் பிரென்ச் ஓபனை பெடரர் வென்றார்
தொடர்புடைய கட்டுரைகள்
'வயசாகிவிட்டதா...? எனக்கா...?' - பெடரரின் பிறந்தநாள் ஸ்பெஷல்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
டென்னிஸ் ராஜாவிற்கு ஈடுகொடுப்பாரா களிமண் தரையின் ராஜாதி ராஜா?- பெடரர் vs நடால்!
Advertisement