Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஏடிபி ஃபைனல் : சதத்தைத் தவறவிட்ட ஃபெடரர்!

Updated: 12 November 2018 17:23 IST

கடைசி 16 தொடர்களில் ஃபெடரர் அரையிறுதியை எட்டாமல் போனது இது இரண்டாவது முறை.

ATP Finals: Roger Federer Loses To Kei Nishikori In Opener
ஃபெடரர், நிஷிகோரியை சமீபத்தில் ஷாங்காய் மற்றும் பாரிஸில் வீழ்த்தினார். ஃபெடரர் 20 தவறுகளை இழைத்தார். மேலும் நடுவரால் எச்சரிக்கப்பட்டார். © AFP

ரோஜர் ஃபெடரர் ஏடிபி ஃபைனல் போட்டியில் நிஷிகோரியிடம் தோற்று தனது 100வது பட்டம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார். இந்த சீஸனில் தொடர்ந்து ஆறு பட்டங்களை வென்ற இவர் இந்தப் பட்டத்தை நேரடி செட்களில் இழந்துள்ளார். நிஷிகோரி 7-6(7/4), 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தினார். கடைசி 16 தொடர்களில் ஃபெடரர் அரையிறுதியை எட்டாமல் போனது இது இரண்டாவது முறை.

இந்த போட்டி குறித்து ஃபெடரர் கூறும் போது '' இருவருமே புள்ளிகளைப் பெற கடுமையாகப் போராடினோம். நிஷிகோரியை விட அதிக வாய்ப்புகளை நான் பெற்றேன். ஆரம்பத்தில் நான் பெற்ற முன்னிலையை நான் தக்க வைக்க தவறிவிட்டதே. இந்த போட்டியின் திரும்புமுனை" என்றார்.

ஃபெடரர், நிஷிகோரியை சமீபத்தில் ஷாங்காய் மற்றும் பாரிஸில் வீழ்த்தினார். ஃபெடரர் 20 தவறுகளை இழைத்தார். மேலும் நடுவரால் எச்சரிக்கப்பட்டார். ஃபெடரர் நிஷிகோரியை வீழ்த்த காட்டிய அவசரமே அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

கடந்த இரண்டு வாரங்களில் ஃபெடரரிடம் இரண்டு முறை தோற்றேன். நான் சிறப்பாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் போட்டியைத் துவங்கினேன். நான் டைபிரேக்கரில் 6-1 என்ற லீடில் துவங்கியதே 7-4 லீட் மூலம் வெல்ல காரணமாக அமைந்தது. தொடர்ந்து போட்டிகளில் ஆடுவதே தோல்விக்கு காரணமா என்பதை ஃபெடரர் மறுத்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் இருவரின் முதல் இன்ஸ்டாகிராம் சந்திப்பு!
ரஃபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் இருவரின் முதல் இன்ஸ்டாகிராம் சந்திப்பு!
“வீட்டிலிருந்து பயிற்சி” - விராட் கோலியை சவாலுக்கு அழைத்த ரோஜர் ஃபெடரர்
“வீட்டிலிருந்து பயிற்சி” - விராட் கோலியை சவாலுக்கு அழைத்த ரோஜர் ஃபெடரர்
2ம் உலகப் போருக்குப் பின் முதன்முறையாக ரத்தான விம்பிள்டன்- உச்சக்கட்ட டென்ஷனில் ஃபெடரர்!
2ம் உலகப் போருக்குப் பின் முதன்முறையாக ரத்தான விம்பிள்டன்- உச்சக்கட்ட டென்ஷனில் ஃபெடரர்!
கொரோனா: “ட்ரிக் ஷார்ட்ஸை” வீட்டிலே பயிற்சி செய்யும் ரோஜர் பெடரர்!
கொரோனா: “ட்ரிக் ஷார்ட்ஸை” வீட்டிலே பயிற்சி செய்யும் ரோஜர் பெடரர்!
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
Advertisement