‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்

Updated: 20 March 2019 11:33 IST

நல்ல ஃபார்மில் இருந்த ஃபெடரர் இந்தியன் வெல்ஸிலும் சாம்பியனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

No Trophy, No Regrets As Roger Federer Departs Indian Wells For Miami
கடந்த மாதம் துபாய் ஓப்பன் தொடரில் ஃபெடரர் வெற்றி பெற்று, தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100வது கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தார் © AFP

இந்தியன் வெல்ஸ் இறுதியில் டோமினிக் தீம், ரோஜர் ஃபெடரரை 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்தப் போட்டியில் எப்படியும் ஃபெடரர் வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இந்தத் தோல்வியால் துவண்டு போகாமல் ஃபெடரர், அடுத்த தொடருக்குத் தயாராகி வருகிறார்.

இந்தப் போட்டியின் தோல்வி குறித்து ஃபெடரர் பேசும்போது, ‘டோமினிக் இறுதிப் போட்டியின் போது என்னைவிட சிறப்பாக விளையாடினார். இந்தத் தோல்வி கஷ்டமாகத்தான் உள்ளது. அதே நேரத்தில் நான் அடுத்தத் தொடருக்குத் தயாராக இருக்கின்றேன். என் உடல் நல்ல நிலையில் இருக்கிறது. 

கடந்த மூன்று வாரங்களாக நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். ஆனால், என் உடல் நல்ல நிலையிலேயே உள்ளது. அது குறித்து நான் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்' என்றார். 

அடுத்ததாக ஃபெடரர், மியாமி மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளார். அந்தத் தொடரை அவர், மூன்று முறை வென்றுள்ளார். இந்தியன் வெல்ஸ் தொடரைப் போன்றே, மியாமி தொடரிலும் முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை மூன்றாவது சுற்றில், ஃபெடரர் சந்திக்க வாய்ப்புள்ளது. அந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மாதம் துபாய் ஓப்பன் தொடரில் ஃபெடரர் வெற்றி பெற்று, தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100வது கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தார். நல்ல ஃபார்மில் இருந்த ஃபெடரர் இந்தியன் வெல்ஸிலும் சாம்பியனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Comments
ஹைலைட்ஸ்
  • மியாமி மாஸ்டர்ஸ் தொடருக்குத் தயாராகி வருகிறார் ஃபெடரர்
  • தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியன் வெல்ஸில் தோற்றுள்ளார் ஃபெடரர்
  • இறுதிப் போட்டியில் ஃபெடரர், டோமினிக் திமை சந்தித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான
பிரென்ச் ஓபனில் வெற்றிகரமான 'கம் - பேக்' கொடுத்த பெடரர்
‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்
‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்
தன்னிகரற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரரின் மகத்தான சாதனை...!!!
தன்னிகரற்ற ஜாம்பவான் ரோஜர் பெடரரின் மகத்தான சாதனை...!!!
களிமண் டென்னிஸுக்கு கம்-பேக் கொடுக்கும் பெடரர்..!
களிமண் டென்னிஸுக்கு கம்-பேக் கொடுக்கும் பெடரர்..!
'என் ஆட்டம் இன்னும் முடியவில்லை...' - பெடரர் கர்ஜனை
Advertisement