ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்

Updated: 16 October 2019 11:01 IST

2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் வாவ்ரின்கா உடன் இனைந்து தங்கம் வென்றிருந்தார் பெடரர். அதே நேரம் ஒற்றையர் பிரிவில் அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை

Roger Federer Confirms Tokyo Olympics Participation In Bid To Win Elusive Singles Gold
Roger Federer: இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார் பெடரர் © AFP

20 கிராண்ட்ஸ்லாம், 6 ஏடிபி டூர் பைனல், லாவர் கோப்பை முதலிய பற்பல சாதனைகளின் சொந்தகாரர் ரோஜர் பெடரர். அவர் இதுவரை வெல்லாத ஒரே பதக்கம் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் தங்கமாகும். அதனை வெல்லும் முனைப்பில் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் தான் பங்கேற்பதாக பெடரர் அறிவித்துள்ளார்.

‘அடுத்த ஆண்டு விம்பிள்டண் – யூஎஸ் ஓபனுக்கு இடையே உள்ள நேரத்தில் என்ன செய்வது என்று எனது அணியுடன் ஆலோசித்து வந்தேன். மறுபடியும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என எனக்கு தோன்றுகிறது' என பெடரர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் வாவ்ரின்கா உடன் இணைந்து தங்கம் வென்றிருந்தார் பெடரர். அதே நேரம் ஒற்றையர் பிரிவில் அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை. 2012 ஒலிம்பிக்கின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற பெடரர் முர்ரேயிடம் தோல்வி கண்டு வெள்ளி பதக்கத்தை வென்றார். 2016 ஒலிம்பிக்கில் பெடரர் பங்கேற்கவில்லை.

அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் பெடரரை தவிர நடால், ஜோகோவிச் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். இதனால் ஒலிம்பிக் தங்கம் வெல்ல தரவரிசையின் முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஜோகோவிச் – நடால் – பெடரர் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 2012 ஒலிம்பிக்கின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் பெடரர்
  • 2016 ஒலிம்பிக்கில் பெடரர் பங்கேற்கவில்லை.
  • பெடரரை தவிர நடால், ஜோகோவிச் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
Advertisement