ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!

Updated: 12 November 2019 15:12 IST

தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றுள்ளார் நடால்.

Rafael Nadal Loses ATP Finals Opener To Alexander Zverev As Stefanos Tsitsipas Triumphs
பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் காயத்தால் நடால் விலகினார் © AFP

திங்களன்று நடந்த ஏடிபி பைனலில் நடப்பு சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்யிடம் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால் தோல்வியடைந்தார். லண்டனின் O2 அரங்கில் நடந்த இந்த போட்டியில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்றார் நடால். குரூப் ஆண்ட்ரே அகாஸியில் நடந்த முந்தைய ரவுண்ட் ராபின் போட்டியில், ஆறாவது சீட் சிட்ஸிபாஸ் 7-6 (7/5), 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தினார். ஆண்டு இறுதி நம்பர் ஒன் இடத்தைப் பெற நோவக் ஜோகோவிச்சுக்கும் நடால் இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது. வயிற்று வலி காரணமாக பாரிஸ் மாஸ்டர்ஸ் அரை இறுதியில் இருந்து நடால் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

33 வயதான ஜேர்மனியின் ஸ்வெரெவ் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். நடால் தனது பொதுவான ஆட்டத்தை விளையாடவில்லை. காயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கையில் நடால் விளையாடியது தெரிந்தது.

நடால் கடுமையாக சர்வ் செய்தாலும், அவரது 22 வயதான எதிர்ப்பாளர் மிகவும் வலுவானவர் என்பதை நிரூபித்தார். ஸ்வெரெவ் மொத்தம் 26 வெற்றி சர்வுகளை சர்வ் செய்தார். நடால் முழு போட்டிகளிலும் மூன்று ஃபோர்ஹேண்ட் பாய்ண்ட்களை மட்டுமே பெற்றார்.

ஸ்பெயினின் 19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், "தோல்விக்கு உடல் பிரச்சினை ஒரு பதில் இல்லை" என்று கூறினார். அவர் தனது வயிற்று காயத்தால் எந்த வலியையும் உணரவில்லை என்று கூறினார். "ஒரே காரணம் நான் இன்றிரவு விளையாடியது போதுமானதாக இல்லை."

"இரண்டு நாட்களில் நான் மிகவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அதுதான் ஒரே விஷயம்" என்று அவர் மேலும் கூறினார். "இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஏனென்றால் காயம் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை காலம் மிகக் குறைவு. ஆனால் நான் முழு முயற்சி செய்கிறேன்" என்றார்.

லண்டனில் நடந்த போட்டியில் 24 வயதிற்குட்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரான ஸ்வெரெவ், இந்த வெற்றியை குறித்து பேசும் போது, "இது மிகவும் பொருள்படும், கடந்த ஆண்டு எனது வாழ்க்கையில் இதுவரை எனது மிகப்பெரிய பட்டத்தை வென்ற பிறகு மீண்டும் இங்கு விளையாடுவது" என்று அவர் கூறினார்.

"இங்கே விளையாடுவது, உங்கள் அனைவருக்கும் முன்னால் விளையாடுவது, O2 யில் விளையாடுவது என்பது வருடத்தில் எங்களிடம் இல்லாத ஒன்று, இது மிகவும் சிறப்பு வாய்ந்தது."

குழு கட்டத்திலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு நடால் இப்போது ஒரு கடினமான பணியை எதிர்கொள்கிறார், சிட்ஸிபாஸ் மற்றும் மெட்வெடேவ் ஆகியோருக்கு எதிராக இன்னும் போட்டிகள் வர உள்ளன.

தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக ஆண்டு இறுதி சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றுள்ளார் நடால். ஆனால் காயங்கள் காரணமாக ஒன்பது சாம்பியன்ஷிப்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement