2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!

Updated: 19 November 2019 14:12 IST

இதுவரை பீட் சாம்ரஸ் 6 முறை சீசன் முடிவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததே சாதனையாக உள்ளது.

Rafael Nadal Ends Year As Number One For Fifth Time
5 வது முறையாக சீசன் முடிவில் நம்பர் 1 இடத்தில் உள்ளார் நடால் © AFP

இந்த சீசன் முடிவில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரராக ரபேல் நடால் உள்ளார். இதன் மூலம் ஐந்தாவது ஆண்டாக சீசன் இறுதியில் நம்பர் 1 இடத்தை தனக்குரியதாக்கினார் நடால். ஏடிபி பைனல்ஸ் தொடரில் முதல் சுற்றை தாண்டவில்லை நடால். இருப்பினும் அவர் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் ஜோகோவிச் உள்ளார். அவருக்கும் நடாலுக்கும் இடையே 840 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஏடிபி பைனல்ஸ் தொடரின் முதல் சுற்றை ஜோகோவிச்சும் கடக்கவில்லை. இதனால் அவரால் முதலிடத்திற்கு முன்னேற முடியவில்லை.

இதுவரை பீட் சாம்ரஸ் 6 முறை சீசன் முடிவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததே சாதனையாக உள்ளது. பெடரர், ஜோகோவிச் ஆகியோர் தலா 5 முறை சீசன் முடிவில் நம்பர் 1 இடத்தில் இருந்துள்ளனர்.

இந்த ஆண்டு நடால் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் தலா 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றனர். ஆஸ்திரேலியா, விம்பிள்டண் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜோகோவிச்சும் பிரென்சு ஓபன், யூ.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடாலும் வென்றுள்ளனர்.

பெடரர் பிரென்சு ஓபன் அரையிறுதியில் நடாலிடமும் விம்பிள்டண் பைனலில் ஜோகோவிச்சிடமும் தோல்வியடைந்தார்.

ஏடிபி பைனல்ஸ் சாம்பியனான சிட்சிபாஸ் 6வது இடத்தில் உள்ளார். 4வது மற்றும் 5வது இடத்தில் முறையே டோமினிக் தியம், டானில் மெட்வதேவ் ஆகியோர் உள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • நடால் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் தலா 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றனர்
  • பிரென்சு ஓபன், யூ.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை நடால் வென்றுள்ளார்
  • இரண்டாம் இடத்தில் ஜோகோவிச் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement