நீண்ட நாள் காதலியை மணக்கிறார் 'கிங் ஆஃப் க்ளே' ரஃபேல் நடால்!

Updated: 02 February 2019 12:43 IST

ரஃபேல் நடால் தனது நீண்ட நாள் காதலி மேரி பெரெல்லோவை திருமணம் செய்யவுள்ளார். 

Rafael Nadal All Set To Get Married With Long-Time Girlfriend Mery Perello
நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். © Facebook/ATP Tour

உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான ரஃபேல் நடால் தனது நீண்ட நாள் காதலி மேரி பெரெல்லோவை திருமணம் செய்யவுள்ளார்.  சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 32 வயதான பெரெல்லோ திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதையடுத்து நடாலுக்கு விரைவில் திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஏடிபி ட்விட்டரும் உறுதி செய்துள்ளது.

நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 8 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் ரன்னர் அப் நிலையையும் வென்றுள்ளார். 'கிங் ஆஃப் க்ளே' என்று அழைக்கப்படும் நடால் தான் உலகிலேயே அதிக முறை பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்றவர். 11 முறை பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நடால், சமீபத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சிடம் ஆஸ்திரேலிய ஓப்பன் 2019ந் இறுதி போட்டியில் தோற்றார். இறுதி போட்டி வரை ஒரு செட்டையும் இழக்காமல் ஆடிய நடால் 6-3, 6-2, 6-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார். காயம் காரணமாக அவதிப்பட்டாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார் நடால்.

Comments
ஹைலைட்ஸ்
  • நடால் தனது நீண்ட நாள் காதலி மேரி பெரெல்லோவை திருமணம் செய்யவுள்ளார்
  • ஜோகோவிச்சிடம் ஆஸ்திரேலிய ஓப்பன் 2019ன் இறுதி போட்டியில் தோற்றார்
  • 11 பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ரஃபேல் நடால்
தொடர்புடைய கட்டுரைகள்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Laver Cup: நடாலுக்கு
Laver Cup: நடாலுக்கு 'டிப்ஸ்' வழங்கிய பெடரர் - வைரல் வீடியோ
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
அமெரிக்க ஓப்பன் இறுதிப்போட்டியில் டேனிலை எதிர்கொள்கிறார் நடால்!
அமெரிக்க ஓப்பன் இறுதிப்போட்டியில் டேனிலை எதிர்கொள்கிறார் நடால்!
கூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்!
கூட்டத்தில் அழுத சிறுவனை தேற்றிய ரஃபேல் நடால்!
Advertisement