அமெரிக்க ஓப்பன் இறுதிப்போட்டியில் டேனிலை எதிர்கொள்கிறார் நடால்!

Updated: 07 September 2019 08:15 IST

18 முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரஃபேல் நடால் 5வது முறையாக அமெரிக்க ஓப்பன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Rafael Nadal Advances To US Open Final Against Daniil Medvedev
நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 27வது க்ராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். © AFP

18 முறை க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ரஃபேல் நடால் 5வது முறையாக அமெரிக்க ஓப்பன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இத்தாலியின் மாடியோ பெரேட்டினியை 7-6 (8/6), 6-4, 6-1. என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இருதிப்போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வெட்டேவ்வை எதிர்கொள்கிறார். டேனில் பல்கேரியாவின் கிரிகோரை 7-6 (7/5), 6-4, 6-3 என்ர கணக்கில் வீழ்த்தி இறுப்போட்டிக்கு முன்னேறினார். கடினமான நாட்களுக்கு பிறகு இந்த அளவுக்கு ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடால் கூறியுள்ளார்.

ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்ய இன்னும் இரண்டு க்ராண்ட்ஸ்லாம் பட்டங்கலே நடாலுக்கு தேவை.

நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 27வது க்ராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். அமெரிக்க ஓப்பனில் இது ஐந்தாவது ஃபைனலாகும்.

கடந்த மாதம் நடைபெற்ற மான்டேரல் இறுதிப்போட்டியில் நடால் டேனிலை வீழ்த்தியுள்ளார். நடால் ஆடாத சின்சினாட்டி தொடரில் டேனில் சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி பற்றி பேசிய நடால் ''டேனில் ஒரு சவாலான வீரர், அவர் வாரந்தோறும் ஒரு படி முன்னேறுகிறார்" என்றார்.

மேலும், நடால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
2019 ஆண்டை நம்பர் 1 வீரராக முடித்தார் நடால் !!
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் வெற்றியை பதிவு செய்த நடால்
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ATP Finals: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி !!
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
ஒலிம்பிக் தங்கத்தை வெல்லும் முனைப்பில் ரோஜர் பெடரர்
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
காயம் குணமடையாததால் ஷாங்காய் மாஸ்டர்ஸில் இருந்து விலகினார் ரஃபேல் நடால்!
Advertisement