இந்தியன் வெல்ஸில் ஜோகோவிச்சை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோல்ஸ்ஹ்ரைபர்!

Updated: 14 March 2019 17:39 IST

செர்பிய வீரராக ஜோகோவிச் மெல்பெர்னில் தனது ஏழாவது தொடர் வெற்றியை பதிவி செய்திருந்தார். அது அவரது 15வது க்ராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

Philipp Kohlschreiber Stuns World Number One Novak Djokovic At Indian Wells
ஜோகோவிச் இதற்கு முன்பு கோல்ஸ்ஹ்ரைபரை 8 முறை சந்தித்துள்ளார். அது அனைத்திலும் கோல்ஸ்ஹ்ரைபர் தோல்வியை சந்தித்துள்ளார். © AFP

ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்ஹ்ரைபர் ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இந்தியன் வெல்ஸ் கோப்பையின் நான்காவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரை வீழ்த்தினார். செர்பிய வீரராக ஜோகோவிச் மெல்பெர்னில் தனது ஏழாவது தொடர் வெற்றியை பதிவி செய்திருந்தார். அது அவரது 15வது க்ராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஜோகோவிச் இதற்கு முன்பு கோல்ஸ்ஹ்ரைபரை 8 முறை சந்தித்துள்ளார். அது அனைத்திலும் கோல்ஸ்ஹ்ரைபர் தோல்வியை சந்தித்துள்ளார். 39வது தரவரிசையில் உள்ள கோல்ஸ்ஹ்ரைபரிடம் ஜோகோவிச் போட்டியை இழந்துள்ளார். 

இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும், நிறைய நேரங்களில் டாப் வீரர்களிடம் தோல்வியுறுகிறோம். அதில் இந்த முறை வெற்றி பெறுவது அளவுகடந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கோல்ஸ்ஹ்ரைபர் தெரிவித்தார்.

ஆட்டம் மழையால் சற்று தாமதமாக துவங்கியது. ஆனால் கோல்ஸ்ஹ்ரைபர் தனக்கு சாதகமான நேரமாக பகல் நேரத்தையும், வெப்பமான நேரத்தையுமே கூறியிருந்தார். ஆனால் நம்பிக்கையுடன் ஆடி ஜோகோவிச்சை நேர் செட்களில் வீழ்த்தினார். 

ஜோகோவிச் ஆட்டத்தில் தோற்ரதும் ராக்கெட்டை வீசியெறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமின்றி டபுள் ஃபால்ட் செய்ததும் கோல்ஸ்ஹ்ரைபருக்கு வாய்ப்பாக அமைந்தது. 

நான்கு தவறுகளை கோல்ஸ்ஹ்ரைபர் செய்தாலும் ஜோகோவிச்சின் டபுள் ஃபால்ட் கோல்ஸ்ஹ்ரைபருக்கு நம்பிக்கையை தந்தது. 

மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக தோற்று இந்திய வெல்ஸ் கோப்பைக்கு வந்தார் கோல்ஸ்ஹ்ரைபர். தற்போது ஃப்ரான்ஸின் கேல் மோன்ஃபில்ஸை காலிறுதியில் சந்திக்கவுள்ளார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான நடால் டியகோவை 6-3, 6-1 என வீழ்த்தி கடைசி 16 சுற்றில் நுழைந்தார். இதுதனக்கு பாசிட்டாவான வெற்றி என்று நடால் குறிப்பிட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
Tennis: ஜோகோவிச், நடால், பெடரர் பங்குபெறும் புது ஏடிபி தொடர்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"உன்னை நிச்சயம் கண்டுபிடிப்பேன்" -ரசிகரை முறைத்த ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
"புல் கூட முன்பில்லாத உணர்வை வெளிப்படுத்தியது": விம்பிள்டன் வெற்றிக்கு பின் ஜோகோவிச்
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
5 மணி நேரம் நீடித்த த்ரில் ஆட்டம் : பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிக்!!
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டியில் ஃபெடரர்
Advertisement