Listen to the latest songs, only on JioSaavn.com
 

மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!

Updated: 13 November 2019 14:42 IST

ஐந்தாம் நிலை வீரரான டோமினிக், தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

Dominic Thiem In ATP Finals Semis As Novak Djokovic, Roger Federer Face Shootout
இந்த வெற்றியின் மூலம் டோமினிக் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறினார் © AFP

ஏசிபி பைனல்ஸ் தொடரின் முக்கியமான போட்டி ஒன்றில் நம்பர் 2 வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார் டோமினிக் தியம். லண்டனின் O2 யில் நடந்த இந்த போட்டியில் 6-7 (5/7), 6-3, 7-6 (7/5) என செட் கணக்கில் டோமினிக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் டோமினிக் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறினார். அதே நேரம் பெடரர் 7-6 (7/2), 6-3 என செட் கணக்கில் மாட்டியோ பெரித்தினியை வீழ்த்தினார். இதனால் அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவார்கள் என்ற போட்டியில் பெடரர் – ஜோகோவிச் மோதவுள்ளனர்.  

ஐந்தாம் நிலை வீரரான டோமினிக், தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ‘இது ஓர் சிறந்த போட்டியாகும். இதற்காக தான் நான் இவ்வளவு நாள் பயிற்சி செய்தேன்' என டோமினிக் கூறினார்.

மூன்றாம் நிலை வீரரான பெடரர் ஏற்கனவே முதல் போட்டியில் தியமிடம் தோல்வியடைந்தார். இதனால் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடினார் பெடரர்.

ஜோகோவிச் – பெடரர் போட்டியில் வெற்றி பெறுபவர் தான் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். இதுவரை 6 முறை ஏடிபி பைனல்ஸ் பட்டத்தையை வென்றுள்ளார் பெடரர். அதுவே ஜோகோவிச் 5 முறை வென்றுள்ளார்.

மற்றொரு பிரிவில் நம்பர் 1 வீரர் நடால் நடப்பு சாம்பியனான அலெக்சாண்டர் வெர்வேவிடம் தோல்வியடைந்திருந்தார். ஸ்டிபனோஸ், டேனில் மெட்வெதேவை வென்றிருந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவார் போட்டியில் பெடரர் – ஜோகோவிச் மோதவுள்ளனர
  • பெடரர் ஏற்கனவே முதல் போட்டியில் தியமிடம் தோல்வியடைந்தார்
  • 6 முறை ஏடிபி பைனல்ஸ் பட்டத்தையை வென்றுள்ளார் பெடரர்.
தொடர்புடைய கட்டுரைகள்
ATP Finals:ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற 21 வயதான சிட்சிபாஸ்
ATP Finals:ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற 21 வயதான சிட்சிபாஸ்
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
மீண்டும் ஒருமுறை பெடரர் - ஜோகோவிச் பலபரீட்சை !!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
12வது முறையாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் வென்று நடால் சாதனை!
‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்
‘கோப்பை இல்லை ஆனாலும் வருத்தம் இல்லை!’- தோல்வியில் துவண்டு போகாத ஃபெடரர்
ஏடிபி ஃபைனல் : சதத்தைத் தவறவிட்ட ஃபெடரர்!
ஏடிபி ஃபைனல் : சதத்தைத் தவறவிட்ட ஃபெடரர்!
Advertisement